கார்ல போறப்போ ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட ஆசாமி.. வைரலான வீடியோ.."தப்பு பண்ணலாம்னு நெனச்சா"..போலீஸ் போட்ட தெறி ட்வீட்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் காரில் செல்லும்போது ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட இளைஞரை காவல்துறை கைது செய்து, காரையும் கைப்பற்றியுள்ளது.
Also Read | அதிகாரி கொடுத்த சிக்னல்.. ஒரே நேரத்துல டேக்-ஆஃப் ஆன 2 விமானங்கள்.. கொஞ்சநேரத்துல பரபரப்பான கண்ட்ரோல் ரூம்..
தெருவில் பறந்த பணம்
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் காரில் பயணித்த இளைஞர் ஒருவர் ரூபாய் நோட்டுக்களை தெருவில் பறக்கவிட்டிருக்கிறார். மேலும், சைரன் பொருத்தப்பட்ட அந்த காரை அதிவேகமாக இயக்கிய அந்நபர் சைரனை ஒலிக்க செய்திருக்கிறார். இதனை மற்றொரு காரில் பயணித்த அவரது நண்பர் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனிடையே இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
இதனிடையே உத்திரப் பிரதேச மாநில காவல்துறை இந்த வீடியோ குறித்து விசாரணையில் ஈடுபட்டது. இதன் பலனாக அந்த இளைஞரை கைது செய்துள்ள போலீசார், அவர் சென்ற வாகனத்தையும் சிறைபிடித்துள்ளனர்.
எச்சரிக்கை
சாலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை இயக்கியதாக அந்த இளைஞரை கைது செய்திருப்பதாக தெரிவித்திருக்கும் காவல்துறை, ட்விட்டர் பக்கத்தில்,"சாலையில் நீங்கள் ஸ்டண்ட் செய்ய நினைத்தால், நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். உங்களை கைது செய்வதுடன் உங்களது காரும் பறிமுதல் செய்யப்படும்" என்று என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் எந்த செக்ஷனில் காவல்துறையினர் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது தெரியவில்லை. தனியார் வாகனங்களில் சைரனை ஒலிக்க செய்வது குற்றமாகும். மேலும், சக வாகன ஓட்டிகளை திசைதிருப்பும் விதமாக பணத்தினை தெருவில் வீசியதற்காக காவல்துறை அந்த இளைஞரை கைது செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
करोगे सड़क पे स्टंट तो हम करेंगे हंट।
गाड़ी होगी ज़ब्त होगे हवालात में शंट।#RoadSafety #DriveResponsibly pic.twitter.com/hC5viffIx3
— UP POLICE (@Uppolice) May 29, 2022
வீடியோ
இந்நிலையில், அந்த இளைஞரின் காரை காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தி, அதனை சோதனையிடும் வீடியோ ஒன்றையும் காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த வீடியோவை பகிர்ந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கிய இளைஞரை கைது செய்து, எச்சரிக்கை விடுத்திருக்கும் காவல்துறையினரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#Sidhu_Musewala_Murder: पंजाबी गायक व कांग्रेस नेता सिद्धू मूसेवाला की ताबड़तोड़ गोली मारकर हत्या, एक दिन पहले ही भगवंत मान सरकार ने हटाई थी सुरक्षा!@PunjabPoliceInd @INCIndia pic.twitter.com/mkCyvyZVUq
— निशान्त शर्मा (@Nishantjournali) May 29, 2022
Also Read | “புகழப்படாத ஹீரோக்கள்”.. IPL இவ்ளோ சிறப்பா நடக்க காரணமே இவங்கதான்.. பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு..!
மற்ற செய்திகள்