இவர நியாபகம் இருக்கா...? 'பொய் விளம்பரத்துல சீட்டிங் செய்து ஃபேமஸ் ஆனவரு...' - மறுபடியும் லம்பா ஆட்டைய போட்ட சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

Freedom 251 என்று போனில் மோசடி செய்து தப்பித்த நொய்டா நபர் மீண்டும் சுமார் 200 கோடி ரூபாய் உலர்பழ வியாபார மோசடியில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர நியாபகம் இருக்கா...? 'பொய் விளம்பரத்துல சீட்டிங் செய்து ஃபேமஸ் ஆனவரு...' - மறுபடியும் லம்பா ஆட்டைய போட்ட சம்பவம்...!

நொய்டாவை சேர்ந்த மோஹித் கோயல், ரிங்கிங் பெல்ஸ் என்ற கம்பெனி Freedom 251 என்ற பெயரில் 251 ரூபாய்க்கு மொபைல் போன் என விளம்பரம் செய்து  ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்பும் சில மோசடி வழக்குகளும் மோஹித் கோயல் மீது நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் நாடு முழுவதும் பல்வேறு வியாபாரிகளிடம் உலர் பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து, அதற்கு முறையாகப் பணம் கொடுக்காமல் ஏமாற்றிய விவகாரத்தில் மோஹித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடமிருந்து ஆடி கார், உலர் பழங்கள் கைப்பற்றப்பட்டும், 3 வெளிநாட்டுக்காரர்களை வேலைக்கு அமர்த்தி, அலுவலகத்திற்கு மாதம் 3 லட்ச ரூபாய் வாடகை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்