இவங்களோட வேலை ஜஸ்ட் கொடுத்த 'டாஸ்க்' முடிக்குறது...! இதுக்கெல்லாம் பின்னாடி இருந்த 'அந்த' 2 பாஸ்...! - அதிர வைக்கும் பகீர் பின்னணி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த பத்து வருடங்களாக தென் மாநிலங்களில் தங்கசெயின்களை பறிக்கும் கும்பல் நொய்டாவில் கைதாகி உள்ளனர். இவர்களை அனுப்பி வைத்த நகைக்கடை அதிபர் மற்றும் அவரது மகனும் வசமாக சிக்கி கொண்டனர்.

இவங்களோட வேலை ஜஸ்ட் கொடுத்த 'டாஸ்க்' முடிக்குறது...! இதுக்கெல்லாம் பின்னாடி இருந்த 'அந்த' 2 பாஸ்...! - அதிர வைக்கும் பகீர் பின்னணி...!

டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்கு இருவர் போலீசார் இருப்பதைக் கண்டவுடன் ஓடியுள்ளனர்.

இதனால், அவர்களை விரட்டி சுட்டு பிடித்தனர். இதில் காலில் காயம் அடைந்து இருவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நபர்களிடம் சோதனையிட்டபோது 2 தங்க செயின், திருட்டு பைக் மற்றும் இரு கள்ளத்துப்பாக்கிகளும் பிடிபட்டன. இதன் விசாரணையில் இருவரும் கடந்த 10 வருடங்களாக தென் மாநிலங்கள், டெல்லி மற்றும் உபியில் தங்கசெயின்கள் பறித்து வந்துள்ளனர்.

இந்த நபர்கள் மீது இதுவரை சுமார் 40 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் தெலங்கானாவின் ஹைதராபாத்தில் பன்னிரண்டு வழக்குகளும் பதிவாகி இருப்பதையும் அப்பகுதியின் காவல்துறை துணை ஆணையரான சு.இராஜேஷ் தன் விசாரணையில் தற்போது உறுதி செய்துள்ளார்.

நொய்டா அருகேயுள்ள சோர்கா கிராமத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் பெயர் மோனு. இன்னொருவர் அணில் என்கிற அன்னு கிரேட்டர் நொய்டாவின் காஸ்னா கிராமத்தை சேர்ந்தவர்.

இந்த இருவருக்கும் அருகில் கடை வைத்திருக்கும் நகைக்கடை அதிபர் கைலாஷ் என்பவருக்கும், அவரது மகன் வேத் பிரகாஷிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

திருடப்பட்ட நகைகளை விலைக்கு வாங்கும் இவர் அக்கொள்ளையர்கள் தென்னிந்தியா வரை தனது சொந்த செலவில் அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழகத்திலும் இவர்கள் கைவரிசையை காட்டியுள்ளனரா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

திருடிய நகைகளில் 60% கொள்ளையர்களுக்கும், 40% நகைக்கடை அதிபருக்கும் என பங்கு பிரித்துள்ளனர். தப்பி ஓடிய நகைக்கடை அதிபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்