"ஸ்மார்ட்போன் மூலமா ஆன்லைன் வகுப்பு!".. 'இப்படி ஒரு' சூழ்நிலையால்.. 'பள்ளி மாணவர்' எடுத்த சோக 'முடிவு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தொடங்கியுள்ளன..

குழந்தைகளுக்கான பாடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, குறிப்பாக தனியார் பள்ளிகள் தீவிரமாக வகுப்பெடுத்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் அடிப்படையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வதாகவும் ஆதலால் வகுப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் பலர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஆன்லைனில் வகுப்பில் பங்கேற்க முடியாமல் கேரள மாணவி அண்மையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது அசாமில் மாணவர் ஒருவரால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பயின்று வந்த பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தொடங்கியதை அடுத்து அந்த வகுப்பில் கலந்துகொள்ள இவரிடம் ஸ்மார்ட்போன் இல்லாத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதுபற்றி பேசிய காவல்துறையினர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவரின் தந்தைக்கு வேலை இல்லாததாகவும், இவரின் தாயார் பெங்களூருக்கு வேலை தேடிச் சென்றதாகவும், இதனிடையே பள்ளியில் நடத்தும் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள தனக்கு தேவையான ஸ்மார்ட்போனை வாங்கி தர தந்தையால் இயலாத காரணத்தினால் தன்னால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை என்கிற மன உளைச்சலுடன் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவருக்கு நெருக்கமான மாணவர்கள் மூலம் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவரின் பிரேத பரிசோதனை முடிவுக்காக அவருடைய உடல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது வெளியானது பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS