"அடுத்த ஒரு வருஷத்துக்கு".. 'அதிரடியாக அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அடுத்த ஓர் ஆண்டுக்கு எந்த விதமான அரசின் புதிய திட்டங்களும் கிடையாது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கோடு, 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

"அடுத்த ஒரு வருஷத்துக்கு".. 'அதிரடியாக அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!'

இதனால் இந்தியப் பொருளாதாரம் பெரும் நலிவை சந்தித்ததால், அந்த பாதிப்பிலிருந்து மீளும் விதமாக பல்வேறு சலுகைகளை கொரோனா நிவாரண நிதியாக 20.97 லட்ச ரூபாய்க்கான திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள 8.01 லட்ச ரூபாய் நிதியையும் அடக்கியே இந்த நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்த ஓராண்டுக்கு எந்த வித புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையில்,  “கொரோனா தொற்று காரணமாக அரசிடம் இருக்கும் பொது நிதியைப்  பயன்படுத்துவதில்  மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளதோடு இதுபோன்று தொடர்ந்து ஏற்பட உள்ள மாற்றங்களுக்கு ஏற்றாற்போல், நிதிப் பங்கீடுகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்