அப்பாடா! புதுசா யாருக்கும் 'கொரோனா' இல்ல... 'கெத்து' காட்டும் தென்னிந்திய மாநிலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக கொரோனா வைரஸ் மூலம் யாரும் பாதிக்கப்படவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

அப்பாடா! புதுசா யாருக்கும் 'கொரோனா' இல்ல... 'கெத்து' காட்டும் தென்னிந்திய மாநிலம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ ஆரம்பித்த போது கேரள மாநிலத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் கேரள அரசின் அசத்தல் நடவடிக்கையால் அம்மாநிலம் மெல்ல மெல்ல மீண்டெழுந்தது. இந்நிலையில், இன்று புதிதாக அம்மாநிலத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. 8 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் யாருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகவில்லை.

முன்னதாக மார்ச் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் கேரளாவில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாதிருந்த நிலையில் அதன் பின்னர் இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் 497 மூலம் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் இன்று மட்டும் 9 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 102 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.