'5 கோடி பேருக்கு வேலை கிடைக்க போகுது...' - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அதிரடி தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரும் 5 ஆண்டுகளுக்குள் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
டெல்லியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். அப்போது இந்தியாவில் இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நாட்டின் வளர்ச்சியில் அவர்களது பங்கு 30 சதவீதமாக உள்ளதாகவும் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலம் இதுவரை 11 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக வரும் 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார்.
ஆனால் கிராமப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் பங்களிப்பு குறைவாக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்