'அடுத்த 5 வருசத்துக்குள்ள...' 'அந்த மாதிரி' ஒரு இடமா கைலாசா மாறும்...' - நித்தியானந்தா தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் நித்யானந்தா தற்போது மீண்டும் தன் கைலாச நாட்டை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் சிக்கி, இன்டர்நேஷனல் அளவில் ரெட் கார்டு வாங்கிய பிரபல சாமியார் நித்தியானந்தா, தான் புதிதாக உருவாக்கியிருக்கும் கைலாச நாட்டிற்கு வருவதற்கு தொடர்பான வீடியோக்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
கைலாசா நாட்டுக்கு வர விரும்புபவர்கள் ஆஸ்திரேலியா நாட்டுக்கு வரவேண்டும். அங்கிருந்து கைலாசா நாட்டுக்கு சொந்தமான தனி விமானங்கள் மூலம் கைலாசா தீவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் கைலாசா நாடு குறித்து மேலும் பல புதிய தகவல்களை கூறி இருக்கிறார். அதாவது, 'மனிதன் முதன்முதலில் வாழ்ந்தது, முதல் மனிதனின் பூர்வீகம் ஆதி குமரி கண்டமே. அந்த குமரி கண்டத்தின் உச்சம் தான் தற்போதைய ஆஸ்திரேலியாவும், ஆப்பிரிக்காவும், மடகாஸ்கரும், இந்தியாவும், இலங்கையும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
மேலும், ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக அடுத்த 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் கட்டமைக்கப்படும். ஏன் கைலாயம் தேவை என்பதற்கு 1008 காரணங்களை அடுத்தடுத்த சத்சங்கங்களில் விளக்குகிறேன். முதல் காரணம் ஒன்றை உங்களோடு பகிர்கிறேன்.
குமரி கண்டத்தின் மறுமலர்ச்சியே கைலாசம், மகா கைலாசம். பரமசிவ பரம்பொருள் நேரில் வந்து பூமியில் மலர செய்ததுதான் குமரி கண்ட வாழ்க்கை முறை. அதை மீண்டும் மலர செய்வதுதான் கைலாயத்தின் நோக்கம்' என நீண்ட நெடிய உரையை ஆற்றினார்.
மற்ற செய்திகள்