இந்தியாவில் இனி இ-பாஸ்போர்ட்.. பட்ஜெட்டில் அறிவிப்பு.. எப்படி இருக்கும்.. விவரம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி: இந்தியாவில் இ.பாஸ்போர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதில் உள்ளே சிப். வைக்கப்பட்டிருக்கும். இது சர்வதேச பயணங்களை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் இனி இ-பாஸ்போர்ட்.. பட்ஜெட்டில் அறிவிப்பு.. எப்படி இருக்கும்.. விவரம்

அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் இ.பாஸ்போர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இத்தகைய பாஸ்போர்ட்கள் பயோமெட்ரிக் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும், உலகளவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குடியேற்றப் பதிவுகள் மூலம் சுமூகமாக செல்வதை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த பாஸ்போர்ட்கள் ஐசிஏஓ-இணக்கமானவை என்றும், மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் தயாரிக்கப்படும் என்றும் சஞ்சய் பட்டாச்சார்யா அப்போது குறிப்பிட்டார்.

இ-பாஸ்போர்ட் யோசனை  முதலில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பயோமெட்ரிக் விவரங்களுடன் கூடிய முதல் இ-பாஸ்போர்ட் 2008ல் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு வழங்கப்பட்டது. ஜெர்மனி, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் தற்போது பயோமெட்ரிக் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

Nirmala Sitharaman announced in her budget speech

இ-பாஸ்போர்ட் என்பது வழக்கமான பாஸ்போர்ட் போலவே இருக்கும். இருப்பினும் இ-பாஸ்போர்ட்டில் ஒரு சிறிய எலக்ட்ரானிக் சிப்புடன் பொருத்தப்பட்டு இருக்கும்.  இது ஓட்டுநர் உரிமத்தில் இருப்பதைப் போன்றதாகும். உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பிற விவரங்கள் உட்பட உங்கள் பாஸ்போர்ட்டில் அச்சிடப்பட்ட அனைத்து தகவல்களையும் மைக்ரோசிப் சேமிக்கும். மைக்ரோசிப் ஒரு பயணியின் விவரங்களை விரைவாகச் சரிபார்க்க  பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உதவும். போலி பாஸ்போர்ட் புழக்கத்தை குறைக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.  மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை மோசடிக்கு பயன்படுத்துவது மிக கடினம் என்கிறார்கள்.

பாஸ்போர்ட்டில் உள்ள ஒவ்வொரு விவரங்களையும் அதிகாரிகள் உடல் ரீதியாக பார்க்க வேண்டியிருப்பதால், தற்போது பயணிகள் சம்பிரதாயங்களை முடிக்க  பயணிகள் கவுன்டர்களில் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. இ-பாஸ்போர்ட் மூலம்,  பயணிகளுக்கு செலவிடும் நேரம் 50%க்கும் அதிகமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசிப் பயோமெட்ரிக் விவரங்களை மற்ற தகவல்களுடன் சேமித்து வைப்பதாகக் கூறப்படுகிறது, இது ஒரு பயணியை டிஜிட்டல் முறையில் அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது. உங்கள் முந்தைய பயணங்களின் விவரங்களையும் இந்த இ பாஸ்போர்டில் சேமிக்க முடியும்.

பயோமெட்ரிக் தரவு

இ பாஸ்போர்ட்டில்  உங்கள் கண்கள், கைரேகை , முகம் உள்ளிட்டவை பயோமெட்ரிக் தரவுகளாக சேமிக்கப்படலாம் . மைக்ரோசிப்பில் சேமிக்கப்பட்ட இந்தத் தகவல் மூலம், எந்த குடிவரவு கவுண்டரிலும் உங்கள் அடையாளத்தை ஒப்பிட்டு சரிபார்ப்பது எளிதாக இருக்கும். அதேநேரம் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை அப்படியே இருக்கும்.  விண்ணப்பப் படிவத்திலும் எந்த மாற்றமும் இருக்காது.

Nirmala Sitharaman announced in her budget speech

வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவில் உள்ள அனைத்து 36 பாஸ்போர்ட் அலுவலகங்களும் இ-பாஸ்போர்ட்டுகளை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழங்கல் செயல்முறையும் அப்படியே இருக்கும். இதுவரை, சோதனை ஓட்டத்தில் அரசு வழங்கிய இ-பாஸ்போர்ட் தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடப்பட்ட கையேடுகளாக இருந்தது. இனி வழங்கடப்பட உள்ள புதிய பாஸ்போர்டின்  சிப் முன்புறத்தில் வைக்கப்படும் . அது இ-பாஸ்போர்ட்டுக்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற லோகோவுடன் வரும்.

UNION BUDGET, 2022BUDGET, EPASSPORT, NIRMALA SITHARAMAN, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, 2022 -23 BUDGET, CENTRAL GOVT, EPASSPORT SHIP

மற்ற செய்திகள்