VIDEO: சத்தியமா 'ஐ-போன்' தான் ஆர்டர் பண்ணினேன்...! 'ஆனா வந்தது அது இல்ல...' 'நொறுங்கி போன இளைஞர்...' - மனதை குளிர வைத்த ஃப்ளிப்கார்ட்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஃபிளிப்கார்ட் அப்ளிகேஷனில் ஐ போன் வாங்கிய நபருக்கு இரண்டு பெரிய பொருட்கள் வந்து சேர்ந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: சத்தியமா 'ஐ-போன்' தான் ஆர்டர் பண்ணினேன்...! 'ஆனா வந்தது அது இல்ல...' 'நொறுங்கி போன இளைஞர்...' - மனதை குளிர வைத்த ஃப்ளிப்கார்ட்...!

பொதுவாகவே ஆன்லைன் ஆப்களில் வாங்குவது ஒரு சிலருக்கு ஏழரையாக வந்து முடியும். அதுவும் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் ஐட்டம் என்றால் சொல்லவே வேண்டாம், அதனை ஆர்டர் செய்த நபர் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு தான் உட்கார வேண்டும்.

இதற்கு முன் ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆப்களில் பல மோசடி சம்பவங்களும், பொருட்களை மாற்றி அனுப்பும் சம்பவங்கள் நடந்திருந்தாலும் பண்டிகை காலங்களில் போடப்படும் ஆஃபர்களுக்கு மக்கள் அடித்து பிடித்து செல்வர்.

அதுபோல ஃபிளிப்கார்ட் கடந்த சில நாட்களாக ஆஃபர்கள் போடப்பட்டது. அதில் ஐஃபோன்களும் அடங்கும். இதைப்பார்த்து ஃபிளிப்கார்ட்டில் ஐஃபோன் ஆர்டர் செய்த ஒரு நபர், தனக்கு டெலிவரி செய்த பொருளை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சண்டிகரைச் சேர்ந்த சிம்ரன்பால் சிங் என்பவர் கடந்த வாரம் ஃபிளிப்கார்ட்டில் போட்ட ஆஃபர் மூலமாக ஐ-போன் ஒன்றை ரூ.51,990-க்கு வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாக ஐ-போன் வாங்கவேண்டும் என்ற கனவை தான் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் மூலம் சிம்ரன்பால் வாங்கியுள்ளார்.

விடிந்ததும் ஐ-போன் டெலிவரி ஆகிவிடும் என எதிர்பார்த்த சிம்ரன்பாலுக்கு அடுத்த நாள் காலை ஃபிளிப்கார்ட் டெலிவரி பாய் பார்சலை கொடுத்துள்ளார். தன்னுடைய கனவு நினைவானதை பார்க்கும் வகையில் சிம்ரன்பால் தான் பார்சலை பிரிப்பதை வீடியோவாக எடுக்க சொல்லியுள்ளார்.

டெலிவரி பாயும் அவர் சொன்னது போல வீடியோ எடுக்கும் போது அந்த பார்சலில் ஐ-போனுக்குப் பதிலாக இரண்டு நிர்மா சோப்பு இருந்ததைப் பார்த்து இருவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார். உஷாரான டெலிவரி பாய் பொருளை பெற்றதற்கான ஓடிபியை, பகிர்ந்து கொள்ள மறுத்த சிம்ரன்பால், வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிம்ரன்பாலின் புகாரை ஏற்றுக் கொண்ட ஃபிளிப்கார்ட் நிறுவனம், ஒரு சில மணி நேரங்களில் சிம்ரன்பால் ஆர்டர் செய்த தொகையை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்து, உடனடியாக அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கூறிய ஃபிளிப்கார்ட் நிறுவனம், 'வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிரான ஒரு விஷயத்தையும் ஃபிளிப்கார்ட் ஏற்றுக் கொள்ளாது. எங்களது குழுவினர் சிம்ரன்பால் இருக்கும் இடதிற்கு சென்று அவருடன் பேசி அவரின் அனைத்து பணமும் கொடுக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' எனக் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்