'எனக்கு மன்னிப்பு கொடுங்க, ஆனா ஒரு டீல்'... 'அப்ரூவராக மாறிய நிரவ் மோடியின் சகோதரி'... அமலாக்கத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிரவ் மோடியின் வங்கி மோசடியில் அவரது சகோதரி புர்விக்கு பங்கு உள்ளதால் அவருக்கு எதிராக இன்டர்போல் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

'எனக்கு மன்னிப்பு கொடுங்க, ஆனா ஒரு டீல்'... 'அப்ரூவராக மாறிய நிரவ் மோடியின் சகோதரி'... அமலாக்கத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து லண்டனுக்குத் தப்பியவர் தொழிலதிபர் நிரவ் மோடி. லண்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நிரவ் மோடி ஜாமீனிலிருந்து வருகிறார். இந்த வங்கி மோசடியில் நிரவ் மோடியின் சகோதரி புர்வ் மோடிக்கும், அவரின் கணவர் மயங்க் மேத்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியது.

Nirav Modi's Sister Pays 17 Crores To Probe Agency

மேலும், நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தும் பணியிலும் அமலாக்கப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நிரவ் மோடியின் சகோதரி புர்வ் மோடி, தனக்கும் இந்த மோசடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அமலாக்கப்பிரிவுக்கு விசாரணைக்கு உதவுவதாகக் கூறி அப்ரூவராக மாறினார். இது தொடர்பாகக் கடந்த ஜனவரி மாதம் புர்வ் மோடியும், அவரின் கணவர் மயங்க் மேத்தாவும் அப்ரூவர்களாக மாறவும், உண்மைகளைக் கூறி, அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு உதவவும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இருவருக்கும் எதிராகக் கடந்த 2018 மே மற்றும் 2019 பிப்ரவரி மாதம் அமலாக்கப்பிரிவு சார்பில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் கடந்த மாதம் 24ம்தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு புர்வ் மோடி அளித்த தகவலில் “ தன்னுடைய பெயரில் தனக்குத் தெரியாமல் லண்டன் வங்கியில் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.

Nirav Modi's Sister Pays 17 Crores To Probe Agency

அந்தப் பணம் தனக்குச் சொந்தமானது அல்ல” எனத் தெரிவித்துள்ளார். அந்த வங்கிக் கணக்கிலிருந்த ரூ.17.25 கோடி(23,16,889 டாலர்) பணத்தை மத்திய அரசின் வங்கிக்கணக்கிற்கு புர்வ் மோடி மாற்றியுள்ளார்” என அமலாக்கப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்