'வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டன் தப்பியோடிய 'நீரவ் மோடி'... லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடான சான்றுகளை அளித்து அதன் மூலம் சுமார் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக தெரியவந்தது. அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன.

'வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டன் தப்பியோடிய 'நீரவ் மோடி'... லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த நிலையில் லாவோசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற அவர் அதன் பிறகு நாடு திரும்பவில்லை அங்கிருந்து இங்கிலாந்துக்கு நீரவ் மோடி தப்பிச் சென்றார். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்து காவல்துறை அவரை லண்டனில் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச்சில் கைது செய்தது.

அதே போல அவருக்குச் சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். விலையுயர்ந்த பொருட்களையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளனர். மேலும் நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்காகச் சட்ட ரீதியிலான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாமுவேல் கூஸ் இன்று தீர்ப்பை வழங்கினார். அதன்படி நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை ஏதும் இல்லை எனத் தீர்ப்பளித்தார்.

நீதிபதி சாமுவேல் கூஸ் தனது தீர்ப்பில் கூறியதாவது: ‘‘நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு என்ற ஆதாரமும் இல்லை. இந்தியாவில் நீதி விசாரணை சுதந்திரமானது. நாடுகடத்தப்பட்டால் நீரவ் மோடி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என இந்திய அரசு உறுதியளித்துள்ளது.

இதனை நீதிமன்றம் ஏற்கிறது. சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நீரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை.’’ எனக் கூறினார்.

மற்ற செய்திகள்