'கிணத்துக்குள்ள 9 சடலம்...' 'நேத்தைக்கு 4, இன்னைக்கு 5...' 'அதுவும் ஒரே கிணறுல...' '2 வயது குழந்தை உட்பட...'அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் தொடர்ச்சியாக 9 வெளி மாநில தொழிலாளர் குடும்பங்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தலை தூக்கிய நாள் முதல், வடமாநில மற்றும் பிழைப்பிற்காக வெளிமாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் நிலை கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. சமீபகாலமாக தினமும் வெளிமாநில தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தெலங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் ஒரு கிணற்றிலிருந்து 2 நாட்களாக 9 பிணங்களை மீட்டுள்ளனர் போலீசார்.
கோரே குந்தா என்ற கிராமத்தில், பேக் தயாரிக்கும் தொழிற்சாலை அருகே உள்ள கிணறு ஒன்றில், சிலரின் சடலம் மிதப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்து 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலம் மீட்டனர். இவர்கள் அருகில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மசூத், அவருடைய மனைவி நிஷா, கணவனை விட்டு பிரிந்து வாழும் மகள் புஸ்ரா, புஸ்ராவின் மூன்று வயது மகன்ஆகியோரின் உடல்களை போலிசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில், இன்று மேலும் 5 சடலங்கள் அதே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மசுத் மகன் சபாக், பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஸ்ரீராம் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆகியோரின் உடல்களை அதே கிணற்றிலிருந்து போலீசார் கைப்பற்றினர்.
ஒரே கிணற்றில் இருந்து இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இதுவரை சுமார் 9 சடலங்கள் ஒரே கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்