கிடுகிடுவென அதிகரித்த புதிய வகை கொரோனா!.. மளமளவென சரிந்த ஐரோப்பிய, இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முந்தைய வாரம் 46,000 புள்ளிகள், கடந்த வாரம் 47,000 புள்ளிகள் என வரலாற்றுச் சாதனையாக புதிய உச்சத்தில் வர்த்தகமான சென்செக்ஸ் திங்கள் அன்று (21.12.2020) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.

கிடுகிடுவென அதிகரித்த புதிய வகை கொரோனா!.. மளமளவென சரிந்த ஐரோப்பிய, இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் சொல்வது என்ன?

நேற்று ஒரே நாளில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 6.59 லட்சம் கோடி ரூபாய் குறைந்ததாகவும், இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தைச் சந்திக்கும் என்கிற பயம் ஒரு புறம் இருந்தது, எனினும் இன்று முற்பகல் வரை முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வந்த நிலையில், மதியம் 1.20 மணிக்கு மேல் திடீரென சென்செக்ஸ் 170 புள்ளிகள் குறைந்து 45,373 புள்ளிகளிலும், நிஃப்டி 13,274 புள்ளிகளில் வர்த்தகமானது.

Nifty Extend Losses India Sensex Due to New Coronavirus Strain

ALSO READ: 'UK-வில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 266 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு தொற்று உறுதி!'.. 'இன்று இரவு முதல் விமான சேவைகள் ரத்து!'

ஆனால் பிற்பகல் யாரும் எதிர்பாராத விதமாக சென்செக்ஸ் திடீரென 452 புள்ளிகள் உயர்ந்து, 45,006 புள்ளிகள் என்கிற அளவிலும், நிஃப்டி 137 புள்ளிகள் உயர்ந்து 13,466 புள்ளிகள் என்கிற அளவிலும் வர்த்தகமாகின. இதுபற்றி கூறும் நிபுணர்கள், இங்கிலாந்தில் புதிய ரக கொரோனா பாதிப்பு, இரண்டாவது அலை கொரோனா எல்லாம் அதிகரித்து வருவதால், ஐரோப்பிய சந்தைகள் நேற்று பலவீனமாகியதாகவும், அதனால் நேற்று இந்திய சந்தையும் சரிந்ததாகவும் கூறுகின்றனர்.

Nifty Extend Losses India Sensex Due to New Coronavirus Strain

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒரு பக்கம் கண்டுபிடிக்கப்பட்டாலும்,  புதிய கொரோனா வைரஸ் பரவல் மற்றும் இதன் காரணமாக லாக்டவுன் மீண்டும் கடுமையாகுமோ என்கிற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும். இதுவே சந்தை சரிவுக்கு காரணம். ஆனால் உண்மையில் பங்குச் சந்தையில் இந்த ஏற்றமும் இறக்கமும் மாறிமாறிதான் வந்து கொண்டு இருக்கும்.

Nifty Extend Losses India Sensex Due to New Coronavirus Strain

எனவே இந்த சமயத்தில் முதலீட்டாளர்கள் சமயோஜிதமாக `புராஃபிட் புக்கிங்' எனப்படக் கூடிய, ‘லாபத்தைக் கொடுத்திருக்கும் பங்குகளை’ முதலில் விற்று வெளியேற வேண்டும். தவிர, நீண்டகால அடிப்படையில் லாபம் தரும் பங்கு என ஒருவேளை முதலீட்டாளர்கள் நினைக்கும் பட்சத்தில், அதிலும் குறைந்த அளவிலான பங்குகளை மட்டும் விற்றுவிடுவதே சிறந்தது. ஏனெனில் நீண்ட கால நோக்கில் லாபம் இப்போது உண்டாகாது. எனவே, இன்றைய லாபம் தரும் பங்குகளை விற்று சம்பாதிப்பதும், இந்த நேரத்தில் குறைந்த முதலீட்டினை செய்வதுமே புத்திசாலித்தனம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Nifty Extend Losses India Sensex Due to New Coronavirus Strain

ALSO READ: “என்ன பெரிய புதிய வகை கொரோனா வைரஸ்!... இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவே போதும்!” - ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் ‘அதிரடி!’

அத்துடன் மொத்தமாக ஒரே மற்றும் பெரிய அளவிலான முதலீட்டை மேற்கொள்வதை விட, மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்ளலாம் என்றும் அதே சமயம் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் கவனமாக இருத்தல் நலம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்