‘வேகமாக பரவும் கொரோனா 2-வது அலை’!.. ‘அடுத்த 4 வாரம் மிகவும் நெருக்கடியானதாக இருக்கும்’.. மத்திய சுகாதாரத்துறை ‘முக்கிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரவலில் அடுத்த 4 வாரங்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

‘வேகமாக பரவும் கொரோனா 2-வது அலை’!.. ‘அடுத்த 4 வாரம் மிகவும் நெருக்கடியானதாக இருக்கும்’.. மத்திய சுகாதாரத்துறை ‘முக்கிய’ தகவல்..!

நாடு முழுவதும் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அது இந்த மாதத்திலும் தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த நிலையில், கொரோனா பரவலில் அடுத்த 4 வாரங்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next 4 weeks very critical: Govt on India's 2nd wave of Covid-19

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) விகே பால் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அதில், ‘கொரோனாவின் 2-வது அலை முதல் அலையை விட மிகவும் வேகமாக பரவுகிறது. நாம் இதை சமாளிக்க வேண்டும். எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் வீழ்த்தவும் வேண்டும். 2-வது அலையை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும். ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Next 4 weeks very critical: Govt on India's 2nd wave of Covid-19

கொரோனா பாதிப்பால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதுதான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம். மருத்துவ துறையில் பணியாற்றுவோரை காப்பாற்றுவதும் அந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நபர்களை பாதுகாப்பதே எந்த ஒரு நாட்டின் நோக்கமும் ஆக இருக்கும். யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவது இலக்கு அல்ல. யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படுமோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவதோ இலக்கு’ என தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்