'கல்யாணத்துக்கு போட்ட பந்தலை இதுக்கா பயன்படுத்தணும்'... 'கதறிய பெற்றோர்'... விருந்துக்கு சென்று வந்த புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆயிரம் கனவுகளோடு மணவாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த பெண்ணுக்கு நடந்த சோகம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கடும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது, பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி என்ற இளம்பெண்ணுக்குத் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
அதன்படி தண்டூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று (மே 14) திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. வீட்டில் உறவினர்கள் நிரம்பி இருந்த நிலையில் அன்றைய தினம் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இரவை கழித்தனர்.
இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு விருந்திற்காகச் சென்று விட்டு அங்குள்ள கோவில் ஒன்றுக்குச் சென்று அபிஷேகம் செய்யப் புதுமண ஜோடி சென்றுள்ளது. பின்னர் புதுமண ஜோடி வீட்டிற்கு வந்த நிலையில் புதுமண பெண் ஸ்ரீவானி அவ்வப்போது வாந்தி எடுத்து வந்துள்ளார். இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஸ்ரீவானியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறியதும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே ஸ்ரீவானி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு கொரோனா காரணமாக இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் கூறினாலும், திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்ததாக உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஸ்ரீவானி தூக்கமின்மை காரணமாக ரத்தக்கொதிப்பில் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். திருமணத்திற்காகப் போடப்பட்ட பந்தலைப் பிரிப்பதற்குள் அதே பந்தலில் எங்கள் மகளுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நிலைக்கு வந்து விட்டோமே என அவரது பெற்றோர் கதறித் துடித்தது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
மற்ற செய்திகள்