'சாய்ந்து' கிடந்த மோட்டார் பைக்... 'சடலமாக' தொங்கிய போலீஸ்காரர்... 'திருமணமான' 3 மாதங்களில் அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணமான 3 மாதங்களில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரி சிவசக்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி(35). புதுவை காவல்துறையில் பணியாற்றி வரும் இவருக்கும் இவருடைய உறவுக்கார பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதாக மோட்டார் பைக்கில் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை கோரிமேடு போலீஸ் மைதானத்தில் மோட்டார் வாகன பிரிவு அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் பாலாஜி தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். அருகில் அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 3 மாதங்களில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம்? என்பது தெரியவில்லை. தற்போது இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்




