'தண்ணீரில் மிதந்து வந்த சிகப்பு கலர் மரப்பெட்டி'... 'மச்சி திறந்து பாப்போமா'?... பெட்டியை திறந்ததும் அப்படியே நிலைகுலைந்து போன படகோட்டிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் மிதந்து வந்த மரப்பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

'தண்ணீரில் மிதந்து வந்த சிகப்பு கலர் மரப்பெட்டி'... 'மச்சி திறந்து பாப்போமா'?... பெட்டியை திறந்ததும் அப்படியே நிலைகுலைந்து போன படகோட்டிகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸிப்பூர் - தாத்ரி காட் பகுதியில் கங்கை ஆற்றில் ஒரு புத்தம்புதிய மரப்பெட்டி மிதந்து வந்தது. இதனைப் பார்த்த படகோட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால் அந்த மரப்பெட்டியைத் திறந்து பார்ப்பதில் அவர்களுக்குச் சிறிய தயக்கம் இருந்தது, இந்நிலையில் மரப்பெட்டியை எடுத்துத் திறந்து பார்த்த படகோட்டிகள் அதிர்ந்து போயினர்.

Newborn Girl In Wooden Box Found Floating In Ganga, Rescued By Boatman

அதில் பிறந்து மிகச்சில நாள்களே ஆன பெண் குழந்தை ஒன்று சிவப்பு நிற பட்டுத்துணியில் சுற்றப்பட்டு கை கால்களை உதைத்தபடி இருந்தது. பெட்டியின் காளிதேவியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. குழந்தை பிறந்த நேரம் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு காகிதம் இருந்தது. அந்தக் குழந்தையைப் படகோட்டிகள் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

Newborn Girl In Wooden Box Found Floating In Ganga, Rescued By Boatman

குழந்தையை வளர்க்கும் பொறுப்பை உத்தரப்பிரதேச மாநில அரசே ஏற்கும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கங்கை நதியில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு 'கங்கா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்