கேரளாவை மிரட்டும் ‘புதிய’ நோய் தொற்று.. 50-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. இதன்மூலமா தான் பரவுதா..? கலக்கத்தில் மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பரவி வரும் புதிய வகை நோய் தொற்றுக்கு 11 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இந்த கொரோனா தொற்றால் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
ஆனால் தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு பல கடுமையாக விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நாளொன்றுக்கு 2 ஆயிரம் பேர் வரை மட்டுமே சபரிமலைக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ‘ஷிகெல்லா’ (Shigella) என்ற புதிய வகை தொற்று நோய் பரவி வருகிறது. மனிதக்கழிவு, அதில் கலக்கும் தண்ணீர் மூலம் இந்த நோய் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை போல இதுவும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவி வருவதால், கோழிக்கோட்டில் வசித்து வரும் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்த ஷிகெல்லா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்லா வயதினரையும் இந்த நோய் தாக்கி வருவதால் சுகாதாரத் துறையினர் வீடு, வீடாகச் சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்