"புது மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு மரியாதையா?..." "தினுசு தினுசா யோசிக்கிறாங்களே"... "மாப்பிள்ளைகள் ஜாக்கிரதை போர்டு வைங்கப்பா..."
முகப்பு > செய்திகள் > இந்தியாமஹாராஷ்டிராவில், ஒரு கிராமத்தில், ஹோலி பண்டிகையையொட்டி, புதிய மருமகனை, கழுதை மீது ஏற்றி ஊர்வலம் அழைத்துச் செல்லும் நூதன வழக்கம், 90 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
மஹாராஷ்டிராவில், பீட் என்ற மாவட்டத்தில் உள்ள விதா கிராமத்தில், ஒவ்வொரு ஆண்டும் புது மாப்பிள்ளையை கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்வது வழக்கம். இதையொட்டி நேற்று ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு, புது மாப்பிள்ளையான தத்தாத்ரே கெய்க்வாட் என்பவரை, கழுதை மீது ஏற்றி, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து கிராம எல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மாப்பிள்ளைக்கு புத்தாடை பரிசாக வழங்கப்பட்டது.
90 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த்ராவ் தேஷ்முக் என்பவர் ஏற்படுத்திச் சென்ற இந்த வழக்கத்தை தற்போது வரை கிராமத்தினர் கடைப்பிடித்து வருகின்றனர். தங்கள் குடும்பத்தில் புதிதாக இணையும் புது மாப்பிள்ளையை வரவேற்கும் விதமாக பெண் வீட்டார் சார்பில் இந்த ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மாப்பிள்ளை தப்பி ஓடாமல் இருக்க ஹோலி பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே, கிராமத்தினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருவர்.