2 வருஷத்துக்கு பொறியியல் கல்லூரிகள் துவங்க தடை.. AICTE அதிரடி.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் 2024 ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அறிவித்துள்ளது.
பொறியியல் கல்வி
உலக அளவில் ஒரு வருடத்திற்கு அதிக பொறியாளர்களை உருவாக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. சராசரியாக இந்தியாவில் ஒரு கல்வி ஆண்டில் ஒரு மில்லியன் மாணவர்கள் பொறியியல் முடிக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய கல்வி நிலை மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஐதராபாத் ஐஐடி தலைவர் பிவிஆர் மோகன் ரெட்டி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தியாவில் தற்போதுள்ள வேலைவாய்ப்பு, கல்வி நிலைமை ஆகியவற்றை இந்த குழு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளை துவங்க விதிக்கப்பட்ட தடையை தொடர இந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது.
பி வி ஆர் மோகன் ரெட்டி தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2024 ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது. மேலும் அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 95 சதவீதம் முதல் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை கொண்ட கல்வி நிறுவனங்களில் 25% கூடுதல் திறன் அளிக்கவும் 80% முதல் 95% வரை மாணவர் சேர்க்கை உள்ள கல்வி நிறுவனங்களில் 15% கூடுதல் திறனையும் அளிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதித்திருக்கிறது.
சான்றிதழ்
மேலும் புதிய வழிகாட்டுதலில் மாணவர்களுக்கு பலவகையான நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்களை வழங்கியிருக்கிறது AICTE. அதன்படி முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்கள் இளநிலை சான்றிதழையும் இரண்டாம் ஆண்டில் இருந்து வெளியேறும் மாணவர்கள் இளநிலை டிப்ளமோ சான்றிதழையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாத்தி ரைடு... பள்ளி வாகனங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி ஆய்வு..!
மற்ற செய்திகள்