"பிறந்த குழந்தைக்கு நேர்ந்துள்ள கதி!".. 'மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய' இந்தியக் குழந்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் அரியதொரு மரபணு கோளாறு காரணமாக, கை, கால்கள் இல்லாத குழந்தை ஒன்று மத்திரப் பிரதேசத்தில் பிறந்துள்ள நிகழ்வு, மருத்துவ உலகை அதிரவைத்துள்ளது.
மத்திரப் பிரதேசத்தில் விடிஷா மாவட்டத்துக்கு உட்பட்ட சக்லா கிராமத்தில் 28 வயது இளம் தாய்க்குதான் இப்படி ஒரு குழந்தை பிறந்துள்ளது. கை, கால்கள் இல்லாமல் பிறந்த இந்த குழந்தையின் உறுப்பு வளர்ச்சிகள் பற்றி ஆய்வு செய்து வருவதாக குறிப்பிடும் ராஜீவ்காந்தி ஸ்மிருதி மருத்துவமனை மருத்துவர்கள் தங்களது வாழ்நாளில் இப்படியான நிகழ்வை முதல் முறையாக சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவிக்கு மருத்துவர்கள், WNT3 மரபணு பிறழ்வினால், டெட்ரா அமேலியா என்கிற நோய்த்தொற்று அறிகுறியுடன், லட்சத்தில் ஒருவருக்கு இத்தகைய குழந்தைகள் பிறப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்