இனி பாஸ்வேர்டு ஷேர் பண்ணா வேலைக்கு ஆகாது .. பிரபல ஓடிடியில் வரப்போகும் புதிய திட்டம்.?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் பல ஓடிடி தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதிக பேர் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றாக, நெட்ஃப்ளிக்ஸ் பார்க்கப்பட்டு வருகிறது.

இனி பாஸ்வேர்டு ஷேர் பண்ணா வேலைக்கு ஆகாது .. பிரபல ஓடிடியில் வரப்போகும் புதிய திட்டம்.?

“சார் ப்ளீஸ் போகாதீங்க”.. கடைசியா ஒரு தடவை ‘அந்த’ பாட்டை பாடுறோம்.. கண்ணீர் மல்க டீச்சருக்கு பிரியாவிடை..!

இதில், பல்வேறு உலக மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள், வெப் சீரியஸ் என புதிது புதிதாக தொடர்ந்து பலவற்றை நெட்ஃப்ளிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வேண்டி வழங்கிக் கொண்டே இருக்கிறது.

அமெரிக்காவை தளமாக கொண்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் லட்சக்கணக்கான பயனர்கள் உள்ளனர்.

அதிரடி திட்டங்கள்

முன்னதாக, சமீபத்தில் தங்களுடைய மாத சந்தா பிளான்களை பயனர்களின் நலனுக்கு வேண்டி குறைத்து புதிய அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டிருந்தது. மொபைலில் மட்டும் பார்க்கும் வசதிக்கு 199 ரூபாய் மாத சந்தாவாக இருந்த நிலையில், அதனை 149 ஆக குறைத்திருந்தது. இதே போல, டிவி, கணினி, லேப்டாப்  ஆகியவற்றில் பார்ப்பதிலும் அதிரடி விலை மாற்றங்களை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் செய்திருந்தது.

Netflix may charge extra amount for sharing password

புதிய பிளான் என்ன?

இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களுக்கு வேண்டி, அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக, பயனர்கள் ஒருவரின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு அவரின் நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்டை பயன்படுத்தி, திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

சமீப காலமாக, இப்படி ஒரே ஒரு நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்டை கொண்டு, கட்டணம் செலுத்தாமல், பலரும் பயன்படுத்தும் வழக்கம், அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், கூடிய விரைவில் பாஸ்வேர்டுகளை பகிர்ந்து கொள்வதை அடிப்படையாக கொண்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூடுதல் கட்டணம்

நெட்ஃப்ளிக்ஸ் கணக்கை பிறருக்கு பகிரும் பட்சத்தில், இதற்காக எக்ஸ்டரா கட்டணம் வாங்க நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு வேண்டி, மாதத்திற்கு 150 முதல் 250 ரூபாய் வரை, அதிக கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

"உங்க வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடுவீங்களா?".. வீடியோ காலில் CM கேட்ட கேள்வி.. நெகிழ்ச்சியில் நரிக்குறவ மக்கள் சொன்ன பதில்..!

NETFLIX, CHARGE EXTRA AMOUNT, SHARING PASSWORD, OTT, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், கூடுதல் கட்டணம்

மற்ற செய்திகள்