"இப்டி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது".. விமானியாக இருந்து விபத்தில் உயிரிழந்த கணவர்.. அதே மாதிரி 16 வருஷம் கழிச்சு உயிரிழந்த பெண் விமானி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் சுமார் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று, விபத்தில் சிக்கி உலகெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
Also Read | உலகத்தையே உலுக்கிய நேபாள விமான விபத்து.. கடைசியா விமானத்துல நடந்த விஷயம்.. வீடியோ..!
இந்த கோர விபத்தில் இந்தியர்கள் 5 பேர் உட்பட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக, தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு உருவானதால் தரையில் மோதி விபத்து நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அதே போல, அங்கே நிலவிய கால நிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கு மத்தியில் விபத்து நடந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட இந்தியர் ஒருவர், விபத்து நடக்க கொஞ்ச நேரம் முன்பு எடுத்த லைவ் வீடியோவும் இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் பீதியில் உறைய வைத்திருந்தது. விபத்து நடக்க போகிறது தெரியாது என்ற சூழலில், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஜன்னல் இருக்கையில் அமர்ந்த படி, வெளியே கேமராவில் காட்டும் காட்சிகள் தெரிய, அடுத்த சில நிமிடங்களில் விபத்து நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இந்த நிலையில், எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் துணை விமானியாக செயல்பட்ட பெண் குறித்தும் சில உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேபாள விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் துணை விமானியாக செயல்பட்டவர் அஞ்சு கதீவாடா. இவர் அந்த விமானம் தரையிறங்கி இருந்தால் அவருக்கு தலைமை விமானி என்ற உரிமம் வழங்கப்பட இருந்தது. இதனால், அஞ்சு துணை விமானியாக செயல்படும் கடைசி பயணமாகவும் இது இருந்துள்ளது. துணை விமானியாக கடைசி விமான பயணத்தை அஞ்சு மேற்கொண்ட போது தான் அந்த விமானம் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
துணை விமானியாக நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் வெற்றிகரமாக அஞ்சு தரை இறங்கியுள்ளார். இன்னொரு பக்கம், அஞ்சுவுக்கு நேர்ந்த துயரம் போலவே அவரது கணவரும் விமான விபத்து ஒன்றில் சிக்கி தான் உயிரிழந்துள்ளார். துணை விமானியாக இருந்த அஞ்சுவின் கணவர், கடந்த 2006 ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்ததாக தெரிகிறது.
அஞ்சுவின் கணவர் இருந்த விமானத்தில் 6 பயணிகள் மற்றும் இரு விமானிகள் உட்பட நான்கு ஊழியர்களும் உயிரிழந்தனர். அந்த விமானமும் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் போது தான் விபத்தில் சிக்கி உள்ளது. அப்படி இருக்கையில், சுமார் 16 ஆண்டுகள் கழித்து அஞ்சுவும் விமானியாகும் கனவு நிறைவேறும் தருணத்தில் அதே போல விபத்தில் சிக்கி உயிரிழந்த விஷயம், பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்