"கல்யாணத்துக்கு விமானத்துல தான் போறோம்".. மொத்த டிக்கெட்டையும் புக் செய்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்கு உறவினர்களை அழைத்துச் விமானத்தையே புக் செய்திருக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"கல்யாணத்துக்கு விமானத்துல தான் போறோம்".. மொத்த டிக்கெட்டையும் புக் செய்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | திடீர்னு ஓய்வை அறிவித்த பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பொதுவாக திருமணம் என்பது பல்வேறு சடங்குகளையும் பெரும் கொண்டாட்டத்தையும் உள்ளடக்கியது. இதற்காக மக்கள் பெருமளவு பணத்தையும் தாராளமாக செலவழித்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரையில் திருமணங்கள் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் நேபாளத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர் தனது திருமணத்திற்காக தன் உறவினர் மற்றும் குடும்பத்தினரை விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

Nepal Bride book entire flight for relatives for his wedding

Images are subject to © copyright to their respective owners.

இதற்காக ஒரு விமானத்தையே அவர் வாடகைக்கு எடுத்திருக்கிறார். நேபாளத்தைச் சேர்ந்த புவன் எனும் மணமகன் தான் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்காக விமானத்தை புக் செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் ஏதோ விளையாட்டுக்கு சொல்வதாய் நினைத்த அவரது உறவினர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் புவன். இந்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (the shubh wedding) பகிர்ந்திருக்கிறார்.

Nepal Bride book entire flight for relatives for his wedding

Images are subject to © copyright to their respective owners.

அதில் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்டாட்டத்துடன் விமானத்தில் ஏறுவதும் அதன் பின்னர் உற்சாகமாய் கைகளை அசைப்பதும் தெரிகிறது. இந்த திருமணம் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 17 லட்சம் முறை பார்க்கப்பட்டதுடன் 38,000 க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்து இருக்கின்றனர்.

Nepal Bride book entire flight for relatives for his wedding

Images are subject to © copyright to their respective owners.

அதே வேளையில் நெட்டிசன்கள் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் விமானத்தை புக் செய்ய எவ்வளவு செலவாகும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | ஒரு ஓவருக்கு 7 பந்தா?.. இந்தியா - பாகிஸ்தான் மகளிர் உலகக்கோப்பை போட்டியில நடந்த சர்ச்சை சம்பவம்..!

NEPAL, BRIDE, NEPAL BRIDE BOOK ENTIRE FLIGHT, WEDDING

மற்ற செய்திகள்