Valimai BNS

அதெப்படி இன்னொருத்தர் கூட நிச்சயம் பண்ணலாம்.. பக்கத்துவீட்டுக்காரரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கடைசியில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை பக்கத்துவீட்டு நபர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதெப்படி இன்னொருத்தர் கூட நிச்சயம் பண்ணலாம்.. பக்கத்துவீட்டுக்காரரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கடைசியில் நடந்த சோகம்..!

பரபரப்பு!.. டிப்போவில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.. என்ன நடந்தது?

டெல்லியின் மீட் நகரில் வசித்து வரும் 22 வயதுடைய இளம்பெண்ணுக்கு உறவினர் ஒருவடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.  இந்த சூழலில் அப்பெண் வேலைக்காக அலுவலகம் சென்றபோது, அவரது பக்கத்துவீட்டு நபர் வழி மறித்து தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, அந்த இளம்பெண்ணின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘எனது மகளுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. ஆனால், பக்கத்துவீட்டு நபர் எனது மகளை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இந்த சூழலில் என் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அதனால் இந்த அவர் நடத்தியுள்ளார்’ என கூறியுள்ளார்.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நபரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் சென்றனர். ஆனால் அதற்குள் அந்த நபர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளத்தில் விழுந்த யானையை காப்பாற்றிய ஆர்க்கிமிடிஸ் தத்துவம்.. மூணு மணி நேரத்துக்குள்ள கச்சிதமா வேலைய முடித்த அறிவியல்

NEIGHBOUR ATTACK, WOMAN, DELHI, திருமணம், பக்கத்துவீட்டு நபர், இளம்பெண்

மற்ற செய்திகள்