20 வயதில்... 'உலகின் மிக வேகமான மனித கணிணி' பட்டத்தை வென்ற இந்த இளைஞர் யார்?.. நெகிழ்ச்சி பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

'உலகின் மிக வேகமான மனித கணிணி' (‘World’s Fastest Human Calculator’) எனும் பட்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த நீலகாந்த பானு பிரகாஷ் என்ற 20 வயது இளைஞர் வென்றுள்ளார்.

20 வயதில்... 'உலகின் மிக வேகமான மனித கணிணி' பட்டத்தை வென்ற இந்த இளைஞர் யார்?.. நெகிழ்ச்சி பின்னணி!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆண்டுதோறும் மனக்கணக்குக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டி, மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் (Mind Sports Olympiad (MSO)) சார்பில் லண்டனில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 13 நாடுகளைச் சேர்ந்த 30 கணித மேதைகள் கலந்துகொண்டனர். இதில், இந்தியா சார்பில் ஹைதராபாத்தை சேர்ந்த நீலகாந்த பானு பிரகாஷ் என்ற 20 வயது இளைஞர் கலந்துகொண்டார். சிறப்பாக விளையாடியுள்ள இவர் இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்று உலகின் மிக வேகமான மனித கணிணி என்ற பட்டத்தை பெற்று சாதைனைப் படைத்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், கணிதத்துடனான தனது ஆர்வம் தனக்கு 5 வயதாக இருந்தபோது தெரியவந்தது. இந்த திறன்களை நான் தொடர்ந்து செய்யாவிட்டால் நான் அறிவாற்றல் பலவீனமடைவேன் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். எனவே, என் அம்மா எனக்கு புதிர்களைக் கொண்டு வந்தார், என் சாய்வு இருப்பதை நான் அறிவேன். கணக்கீடுகள் நான் செய்வதை விரும்பிய ஒன்று என்பதை நான் உணர்ந்தேன் என தெரிவித்தார். 

ஒவ்வொரு நாளும் சுமார் 4-6 மணிநேரம் பயிற்சி செய்வேன். ஆனால் பின்னர் அதைக் குறைத்தேன். ஏனெனில் நான் மேம்படுத்த வேண்டிய பிற திறன் தொகுப்புகள் உள்ளன. நான் ஒரு கணித கால்குலேட்டராக இருந்திருந்தால், வணிகம் எவ்வாறு செயல்படுகிறது அல்லது கொள்கை எவ்வாறு செயல்பட்டது என்று எனக்குத் தெரியாமல் போயிருக்கும். எனவே, கணிதத்தை தவிர்த்து மற்றவற்றில் கவனம் செலுத்தியதாக தெரிவித்தார். இப்போது, இந்த பட்டம் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இன்னும் செய்ய நிறைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே உலகின் மிக வேகமான மனித கணிணி என்ற பட்டம் பெற்ற நீலகாந்த பானு பிரகாஷை பாராட்டி கடிதம் எழுதியுள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உலக சாம்பியன் பட்டம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மனித கணிணி என்ற பட்டத்தை மட்டுமின்றி 50 லிம்கா ரெக்கார்ட்ஸ் மற்றும் நான்கு உலக சாதனைகளையும் படைத்துள்ள நீலகாந்த பானு பிரகாஷ், கணித மேதைகளான ஸ்காட் ஃபிளான்ஸ்பர்க் மற்றும் சகுந்தலா தேவி ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்