‘நோபலுக்கு சமமான மகசேசே விருது’.. கெஜ்ரிவால், கிரண்பேடி வரிசையில் வென்ற பிரபல பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய ஊடகவியலாளர் ரவிஷ் குமாருக்கு மகசேசே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆசிய கண்டத்தில் பொதுச் சேவை, அரசுப்பணி, சமூக சேவை, இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது. மகசேசே விருது ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வரும் செப்டம்பர் மாதம் வழக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதழியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக என்.டி.டி.வி பத்திரிக்கையின் ஊடகவியலாளர் ரவிஷ் குமாருக்கு மகசேசே விருது அறிவிப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 44 வயதான ரவிஷ் குமார் என்.டி.டி.வி பத்திரிக்கையில் மூத்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ‘பிரைம் டைம்’ என்ற நிகழ்ச்சியின் மூலமாக எளிய மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும் அவர்களது பிரச்சனை குறித்தும் பேசி வருகிறார். இதனை கவுரவிக்கு விதமாக அவருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்த விருதை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.