'அடுத்த டார்கெட் ஷாருக்கான்தான்னு பேச்சு ஓடுச்சு'... 'இன்றோடு முடியும் காவல்'... ஆர்யன் கான் வழக்கில் புதிய ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபோதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு போதைப் பொருள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாகத் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 8 பேரை அதிரடியாகக் கைது செய்தார்கள்.
இந்த கைது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த முக்கிய காரணம் கைது செய்யப்பட்டவர்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், ஆர்யன் கான் பல முக்கிய தகவல்களைத் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆர்யன் கான் தரப்பில் ஜாமினுக்கு முயற்சி செய்த நிலையில், நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து விட்டது.
இன்றோடு ஆர்யன் கானின் காவல் முடியும் நிலையில், இந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக மகாராஷ்டிர மாநில மந்திரி நவாப் மாலிக், '' ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது திட்டமிட்ட சதி. கடந்த ஒரு மாதமாக கிரைம் நிருபர்களிடையே, அடுத்த இலக்கு ஷாருக்கான்தான் என்ற செய்தி உலாவிக் கொண்டே இருந்தது. தற்போது அது உண்மையாகியுள்ளது. இதற்குப் பின்னல் பெரிய சதி உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் பேசாத நிலையில், முதல் முறையாக மகாராஷ்டிர மாநில அமைச்சரே இந்த சம்பவத்திற்குப் பின்னால் சதி இருப்பதாகக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்