'ஆற்றில் மிதந்த ஆண், பெண் சடலங்கள்...' 'இருவர் கைகளையும் துப்பட்டாவில் கட்டி...' - அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகையில் துப்பட்டா கட்டப்பட்ட நிலையில் ஆண் மற்றும் பெண்ணின் சடலம் நர்மதா ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் பரூச் பகுதியில் ஓடும் நர்மதா ஆற்றில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆண் மற்றும் பெண்ணின் சடலம் மிதப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆற்றில் மிதந்த சடலங்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட சடலங்களின் கைகள் துப்பட்டாவில் இறுக்கமாக கட்டப் பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனரா அல்லது வேறு யாராவது கொலையில் ஈடுபட்டுள்ளனரா எனவும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், சம்பவ இடத்திலிருந்து தற்கொலை குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது மீட்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பருச் சிவில் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரூச் பகுதியின் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர சூடாஸ்மா, 'மீட்கப்பட்ட சடலங்களின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. இருவரும் ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்து இவ்வாறு செய்தார்களா இல்லை வேறுயாராவது இவ்வாறு செய்தார்களா என இனி விசாரணையில் தெரிய வரும். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் விசாரணை தொடங்கும்' எனக்கூறியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் இறந்த அந்தப் பெண் பருச் நகரில் உள்ள சதேஷ்வரில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது மேலும் அந்த ஆண் நவ்சரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS