நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை வழக்கு .. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.. தமிழக அரசு கொடுத்த மனு.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை வழக்கு .. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.. தமிழக அரசு கொடுத்த மனு.. முழு விபரம்..!

Also Read | "என்ன சத்தமே வரல".. கம்முன்னு இருந்த ஆடியன்ஸ்.. சைலண்டா சூரியகுமார் யாதவ் கொடுத்த சிக்னல்.. தெறி வீடியோ..!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 தமிழருக்கு 1998-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் உச்சபட்ச தண்டனை உறுதியானது.

Nalini and 5 others release case hearing in supreme court

இதனை தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டில் நளினிக்கும், 2014 ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் உச்சபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனிடையே தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் பேரறிவாளன். இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி விடுதலை செய்து உத்தரவிட்டது. 

இந்நிலையில், தங்களையும் அதேபோன்று விடுதலை செய்யவேண்டும் என நளினி உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுக்குறித்து தமிழக மற்றும் மத்திய அரசு பதில் அளிக்குமாறு கடந்த மாதம் 26 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை அளித்தது. அதில் நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது.

Nalini and 5 others release case hearing in supreme court

இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் நாகரத்தனா அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் வழக்கை வரும் நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Also Read | AAVIN MILK PRICE HIKE: ஆவின் அரை லிட்டர் ஆரஞ்ச் பால் விலை 6 ரூபாய் உயர்வு.!

RAJIV GANDHI ASSASSINATION CASE, RAJIV ASSASSINATION, NALINI, SUPREME COURT

மற்ற செய்திகள்