"18 வருஷம் ஆகிடுச்சு., இருந்தும்.." நடிகை நக்மா போட்ட ட்வீட்.. அரசியல் வட்டாரத்தில் உருவான பரபரப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழ் திரை உலகின் தொண்ணூறு கால கட்டத்தில், மிக பிரபலமாக இருந்தவர் நடிகை நக்மா. காதலன், பாட்ஷா, லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி என ஏராளமான படங்கள் நடித்து, அதிகம் புகழையும் வர அடைந்திருந்தார்.

"18 வருஷம் ஆகிடுச்சு., இருந்தும்.." நடிகை நக்மா போட்ட ட்வீட்.. அரசியல் வட்டாரத்தில் உருவான பரபரப்பு

Also Read| IPL 2022 ஃபைனல்ஸ் : "2011 'WC' Finals கூட இவ்ளோ கனெக்ஷன் இருக்கா??.." குஜராத் அணி பகிர்ந்த ட்வீட்.. இப்போ செம வைரல்

தமிழ் மட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் நிறைய படங்களில் நக்மா தோன்றி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சினிமாவில் இருந்து ஒதுங்கிக் கொண்ட நக்மா, கடந்த 2003-04 ஆண்டு முதல், முழு நேர அரசியலில் ஈடுபடவும் தொடங்கினார். இதற்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்தும் நக்மா செயல்பட்டு வருகிறார்.

அதிருப்தி அடைந்த நக்மா

இந்நிலையில், நடிகை நக்மா செய்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி, அந்தந்த மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

Nagma tweet about rajya sabha election candidate list

இதற்கான வேட்புமனுத் தாக்கல், நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியும், தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டிருந்தது.

18 வருஷமா இருக்கேன்..

மேலும், காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என்பதால் நக்மா அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள நக்மா, "2003-04 இல் நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. அப்போது தலைவர் சோனியா காந்தி, என்னை ராஜ்ய சபாவில் தேர்ந்தெடுப்பதாக என்னிடம் உறுதி அளித்திருந்தார்.

Nagma tweet about rajya sabha election candidate list

ஆனால், அதன் பிறகு இப்போது சுமார் 18 வருடங்கள் ஆகி விட்ட போதும், இன்னும் ஒரு வாய்ப்பைக் கூட தரவில்லை. மகாராஷ்டிர மாநிலங்களவையில் இம்ரானுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. நான் ஒன்றை கேட்கிறேன். நான் என்ன குறைவான தகுதி உடையவளா?" என தனது ட்வீட்டில் நக்மா குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத காரணத்தினால், வெளிப்படையாக நக்மா செய்துள்ள ட்வீட், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Nagma tweet about rajya sabha election candidate list

Also Read | IPL 2022 : கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. ஐபிஎல் Start ஆகுறதுக்கு முன்னாடி தோனி சொன்ன விஷயம்.. "கரெக்டா Connect ஆகுதே"

NAGMA, NAGMA TWEET, RAJYA SABHA ELECTION, CANDIDATE LIST

மற்ற செய்திகள்