100 அடி பாழும் 'கிணறு'... கிணத்துக்குள்ள விழுந்த 'சிறுத்தை'... உசுர குடுத்து உள்ள எறங்கிய 'ஆஃபிசர்'... - சிறுத்தை காப்பாற்றப்பட்டதா? இல்லையா? திக்... திக்... நிமிடங்கள்...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் அமைந்துள்ள காரபுரா பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த 100 அடி பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக அந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், சுமார் 100 அடி கிணற்றில் விழுந்த அந்த சிறுத்தையை மீட்க வனத்துறை அதிகாரி சித்தராஜ் என்பவரை இரு அறைகள் கொண்ட இரும்புக்கூண்டில் உட்கார வைத்து 100 அடி கிணற்றில் இறக்க திட்டமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, செடி, கொடிகள் நிறைந்த அந்த கிணற்றுக்குள் அதிகாரி இறக்கப்பட்டார்.
தண்ணீர் இல்லாத அந்த கிணற்றில் கூண்டு இறக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த அதிகாரி செல்போன் மூலம் வெளியில் இருந்த அதிகாரிகளுடன் பேசிக் கொண்டே சென்றார். கிணற்றின் ஆழம் வரை கொன்று சென்ற நிலையில், டார்ச் லைட் உதவியுடன் பாறை இடுக்கில் பதுங்கி இருந்த சிறுத்தை உறுமிக் கொண்டிருந்ததை கண்டுள்ளார். இந்நிலையில், இரு பிரிவாக இருக்கும் கூண்டின் மற்றொரு பகுதியை திறந்து சிறுத்தையை உயிருடன் கூண்டுக்குள் வர செய்து அதனை உயிருடன் மீட்க முயற்சி செய்தார். அப்போது இருட்டாக இருந்ததால் சிறுத்தையை கூண்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.
சில நாட்கள் உணவு ஏதுமின்றி சிறுத்தை அவதிப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து, மறுநாள் இறைச்சித் துண்டை வலைக்குள் வைத்து கிணற்றுக்குள் அனுப்பி வைத்தனர். அப்போது அதனை எடுக்க சிறுத்தை வலை மீது ஏறியதும், சிக்கிக் கொண்ட சிறுத்தையை கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டு கூண்டுக்குள் அடைத்தனர். தொடர்ந்து சிறுத்தையின் உடலில் காயங்கள் இருக்கிறதா என சோதித்த நிலையில் பெரிய காயங்கள் எதுவும் இல்லை என தெரிகிறது.
அதே போல, கூண்டின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிய வனத்துறை அதிகாரியின் கடின முயற்சிக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. உயிருக்கு ஆபத்தான தருணத்திலும் அதனை பெரிதாக கருதாமல் சிறுத்தையை காப்பாற்ற முயற்சி செய்த அதிகாரிக்கு நெட்டிசன்கள் லைக்குகளை அளித்து வருகின்றனர். சிறுத்தை கிணற்றில் விழுந்த காரணத்தால் அந்த பகுதியில் சில நாட்கள் பரபரப்பு ஏற்பட்டது.
He is Siddarju, RFO from Nagarhole. He entered 100ft dry well to rescue a leopard. By locking himself in a metal cage with a torch and his mobile phone in hand, entered a dry well to rescue a leopard. This is what commitment looks like. Proud of such green soldiers. pic.twitter.com/HBJokpdDOd
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 20, 2020
மற்ற செய்திகள்