3 வருஷமா மூச்சு விடவே சிரமம்.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்திட்டு டாக்டர் சொன்ன விஷயம்.. ஒரு மட்டன் பீஸ் செஞ்ச வேலை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் மூச்சு விடவே சிரமப்பட்ட நபர் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது பிரச்சனைக்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் கண்டறிந்து இருக்கின்றனர். அறுவை சிகிச்சையின் மூலம் தற்போது அந்நபர் பரிபூரண குணமடைந்துள்ளார்.

3 வருஷமா மூச்சு விடவே சிரமம்.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்திட்டு டாக்டர் சொன்ன விஷயம்.. ஒரு மட்டன் பீஸ் செஞ்ச வேலை..!

Also Read | பனிக்குள் தெரிந்த முகம்.. அலறிய பொதுமக்கள்.. தனது பிறந்தநாளை கொண்டாட சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!

கேரள மாநிலத்தை சேர்ந்த 55 வயதான நபர் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டு வந்திருக்கிறார். மேலும் அவருக்கு நிமோனியா பாதிப்பும் இருந்திருக்கிறது. அடிக்கடி சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவு ஏற்பட்டு வந்ததால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று இதற்கென சிகிச்சை எடுத்தும் வந்திருக்கிறார். ஆனாலும் அந்த மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் சரியாகவில்லை. அந்த நபரும் பல மருத்துவர்களை சந்தித்து இது குறித்து அறிவுரை கேட்டிருக்கிறார். அப்படி பல மாத்திரைகளை அவர் சாப்பிட்டும் எந்த பலனும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனிடையே சமீபத்தில் ஒரு நாள் அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. இதனால் கொச்சியில் உள்ள கொலஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் மூச்சுக் குழாய் பரிசோதனையை எடுக்க பரிந்துரை செய்திருக்கின்றனர். ஸ்கேன் எடுக்கும் போது அவருடைய வலது நுரையீரலில் விசித்திரமான ஒன்று இருப்பதை மருத்துவர்கள் கவனித்திருக்கின்றனர். இதனை அடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக அம்ரிதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.

அங்கு நுரையீரல் நிபுணரும் மருத்துவருமான டிங்கு ஜோசப் சிக்கலான மூச்சுக் குழாய் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அந்த பொருளை நுரையீரலில் இருந்து அகற்றி உள்ளார். அதன் பின்னர் தான் அது மட்டனில் உள்ள போட்டிக்கறி என்றும் அதன் காரணமாகவே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததும் மருத்துவர்களுக்கு புலனாகி இருக்கிறது.

அதன்பிறகு அந்த துண்டை அவரிடம் மருத்துவர்கள் காட்டி இருக்கின்றனர். அப்போது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மட்டன் போட்டி கறி சாப்பிடும் போது முதன் முதலாக இந்த சிக்கல் வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிறகு மூன்று நாட்கள் அவர் கண்காணிப்பில் இருந்திருக்கிறார். அதன் பின்னர் வீடு திரும்பிய அந்த நபர் தற்போது பூரண குணமடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்து.. மைசூரில் பரபரப்பு.. முழு விபரம்..!

KERALA, MUTTON PIECE, MUTTON PIECE STOCKS, MAN LUNGS, REMOVE

மற்ற செய்திகள்