திடீரென 'சென்னை' தனியார் மருத்துவமனையில் 'அனுமதிக்கப்பட்ட முத்தையா 'முரளிதரன்'.. - முழு 'விவரம்' உள்ளே!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும், கிரிக்கெட் உலகின் சூழல் ஜாம்பவான் எனவும் வர்ணிக்கப்படும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan), டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை அந்த சாதனையையும் யாரும் நெருங்கக் கூட முடியாத நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இருதய நோய் சம்மந்தமான பிரச்சனை காரணமாக, சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் முரளிதரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையை முரளிதரன் மேற்கொண்ட நிலையில், சிகிச்சை முடிந்த பிறகு, தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் மீண்டும் ஹைதராபாத் அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்