'சிக்கன் மட்டும் தான் சாப்பிடுவார்...' 'பில் பார்த்து தலையே சுத்திடுச்சு...' இப்போ பயங்கர கடுப்புல இருக்காரு...' 'நாயோட ஓனர கூப்பிட்டு சொல்லியாச்சு, ஆனால்...' திணறும் அதிகாரிகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலையில் நிராகதியாக திரிந்த நாயை மீட்டு உணவளிக்க முடியாமல், நாயின் எஜமானரை தேடும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் தனித்து விடப்பட்டு ஆதரவற்று சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்றை காப்பகத்திற்கு கூட்டி சென்றனர். ஆனால் அந்த நாயால் அவர்களுக்கு இவ்வளவு செலவாகும் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அந்த நாய்க்கு உணவளிக்க கடந்த 2 மாதங்களாக ரூ.6,000க்கும் மேல் செலவாகியுள்ளதால் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 3ம் தேதி நாயை மீட்ட அதிகாரிகள், அதன் உரிமையாளரை கண்டுபிடித்து தரக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிக்கனை தவிர காய்கறி, தானியம் உட்பட எந்த உணவையும் நாய் சாப்பிடுவதில்லை. மேலும் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் பில் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பில் தொகையை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது அந்த நாய் ஆக்ரோஷமாக காணப்படுகிறது. எனவே நாயை தனியாக பாதுகாப்பு கூண்டில் அடைத்து வைத்துள்ளனர்.
மேலும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் இதுபற்றி தெரிவிக்கையில், ‘மே மாதம் நாயின் எஜமானரை கண்டுபிடித்தோம். அவர் தற்போது பாட்னாவில் இருப்பதாக கூறினார், மேலும் ஊரடங்கு முடிந்து நாயை பாங்கி செல்வதாக கூறினார். ஆனால் அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சீற்றத்துடன் காணப்படும் நாயால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த முடிவையும் கைவிட்டோம். காப்பகத்தில் இருக்கும் ஊழியர்கள் கூட அதன் அருகில் செல்ல அஞ்சுகின்றனர்’ என கூறியுள்ளார்.
அதனால் நாயின் ஓனரிடம் ஒப்படைப்பதை தவிர வேறுவழியில்லை என முடிவு செய்த மாநகராட்சி அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
மற்ற செய்திகள்