ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. லிவிங் டுகெதரில் இருந்த வாலிபர் செஞ்ச பயங்கரம்.. விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துவந்த பெண்ணை கொலை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதலர்கள்.. சோகத்தில் முடிந்த காதல் பயணம்.. கலங்கிப்போன குடும்பத்தினர்..!
டெல்லியில் லிவிங் டுகெதரில் தன்னுடன் வசித்து வந்த ஷ்ரத்தா வாக்கர் என்னும் இளம்பெண்ணை கொலை செய்ததாக அஃதாப் பூனாவாலா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஷ்ரத்தாவை கொலை செய்து, அவருடைய உடலை பல பாகங்களாக வெட்டி வனப்பகுதியில் அஃதாப் வீசியதாக தகவல்கள் வெளியானது. இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் சாஹில் கெலாட் எனும் இளைஞர் தன்னுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்துவந்த நிக்கி யாதவ் எனும் இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை தனது ஹோட்டலில் இருந்த ஃபிரிட்டிஜில் மறைத்து வைத்தாக தகவல் வெளியானது. இதனையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மகாராஷ்டிராவில் இதேபோல மற்றொரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பில் சமீபத்தில் ஒரு தம்பதி குடியேறியுள்ளனர். ஹர்திக் ஷா (வயது 26) மற்றும் மேகா தன்சிங் தோர்வி (வயது 35) ஆகிய இருவரும் தங்களுக்கு திருமணமாகிவிட்டதாக வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து, ரியல் எஸ்டேட் ப்ரோக்கரான அந்த வீட்டின் உரிமையாளர் வீடு கொடுக்க சம்மதித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஹர்திக் - தோர்வி தங்கியிருந்த வீட்டில் இருந்து அடிக்கடி துர்நாற்றம் வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குள் பரிசோதனையிட்டிருக்கிறார். அப்போது, தோர்வியின் உடல் அழுகிய நிலையில் கட்டிலுக்கு அடியே கிடந்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தோர்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே அவருடன் தங்கியிருந்த ஹர்திக் அங்கிருந்து தப்பிச்சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது. உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து பேசியுள்ள காவல் ஆய்வாளர் ஷைலேந்திர நாகர்கர், தோர்வி மரணமடைந்து ஒருவார காலம் ஆகியிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்திருக்கிறார். விசாரணையில் ஹர்திக் வேலையில்லாமல் இருந்ததாகவும் அதன் காரணமாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தோர்வியை கொலை செய்த ஹர்திக் அங்கிருந்த மர சாமான்களை விற்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் லிவிங் டுகெதரில் வசித்துவந்த பெண்ணை கொலை செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்