"அய்யய்யோ, அக்கவுண்ட் நம்பர தப்பா போட்டுட்டேன்.." தவறுதலாக போன 7 லட்சம் ரூபாய்.. "கடைசி'ல நடந்தது தான் ஹைலைட்டே.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்த டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்வது, போனுக்கு ரீசார்ஜ் செய்வது, கரண்ட் பில் கட்டுவது உள்ளிட்ட ஏராளமான வேலைகளை கணினி அல்லது மொபைல் போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி எளிதில் செய்து வருகிறோம்.

"அய்யய்யோ, அக்கவுண்ட் நம்பர தப்பா போட்டுட்டேன்.." தவறுதலாக போன 7 லட்சம் ரூபாய்.. "கடைசி'ல நடந்தது தான் ஹைலைட்டே.."

Also Read | "சுத்த முட்டாள்தனம்'ங்க இது.." முக்கியமான மேட்சில் பும்ரா செய்த தவறு..? விளாசித் தள்ளிய பீட்டர்சன்

அதே போல, முன்பு போல வங்கிகளில் சென்று தங்களின் கணக்கில் இருக்கும் பணத்தை மற்றவர்களுக்கு செலுத்தாமல், மொபைல் போன் மூலம் செலுத்திக் கொள்ளும் டிஜிட்டல் Transaction கூட இன்று பரவலாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மும்பை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது உறவினருக்கு பணத்தை அனுப்பும் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றைக் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தவறுதலான போன 7 லட்ச ரூபாய்..

மும்பையை அடுத்த மீரா ரோடு என்னும் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர் ஒருவருக்கு, சுமார் 7 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்ப முற்பட்டுள்ளார். அப்போது, அவர் உறவினரின் வங்கி எண்ணை தவறாக கொடுக்கவே, அது அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக சென்றுள்ளது.

மொத்தம் 7 லட்சம் ரூபாய் பணம், யாரென தெரியாத ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்றதால், அந்த பெண் அதிர்ந்து போயுள்ளார். தொடர்ந்து தனது வங்கியில் இதுகுறித்து தெரிவித்த அந்த பெண், அவர்களின் சார்பில் உதவியும் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணின் தவறால் பணம் மாறிச் சென்றதால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், சைபர் செல்லின் உதவியை நாடியுள்ளார் அந்த பெண்.

Mumbai woman wrongly transfers 7 lakh rupees cyber cell helps

நான் தரமாட்டேன்..

தொடர்ந்து, போலீசார் அந்த பெண் தவறாக அனுப்பிய வங்கி கணக்கின் உரிமையாளரையும் கண்டுபிடித்து அவரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அந்த நபரோ, பணத்தை திருப்பித் தர மாட்டேன் என்றும், அந்த பணம் தான் லாட்டரியில் ஜெயித்தது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் பின்னர், போலீசார் அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய பின்னர் தான், பணத்தை அந்த நபர் மீண்டும் தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர், அடுத்த சில தினங்களில், அந்த பணமும் மீண்டும் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் போது, இந்த மாதிரி தவறுதலாக அனுப்பாமல், கவனமாக பணத்தை கையாள வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Also Read | இம்மா பெரிய சைஸ்'ல Contract.. மொத்தமா 8 Rules.. மிரள வைத்த மணமக்கள்.. "ஒவ்வொரு கண்டிஷனும் தாறுமாறா இருக்கே.."

MUMBAI, WOMAN, WOMAN WRONGLY TRANSFERS MONEY, CYBER CELL HELPS

மற்ற செய்திகள்