உயிரை காப்பாற்றிய மீட்பர்.. மாஜி கர்னலின் கண்ணீர் பேட்டி.. குவியும் பாராட்டு.. யார் அந்த ஸ்விகி ஊழியர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாஜி கர்னலின் உயிரை ஸ்விகி டெலிவரி ஊழியர் காப்பாற்றிய சம்பவம், பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

உயிரை காப்பாற்றிய மீட்பர்.. மாஜி கர்னலின் கண்ணீர் பேட்டி.. குவியும் பாராட்டு.. யார் அந்த ஸ்விகி ஊழியர்!

இன்றைய காலகட்டத்தில் நாம் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம், பலரிடையே அதிகரித்து வருகிறது.

வேலைப்பளு அதிகமாக இருக்கும் பலரும், தங்களது நேரத்தை காத்துக் கொள்ள, ஆன்லைன் மூலம் உணவினை ஆர்டர் செய்து கொள்கின்றனர்.

உணவு டெலிவரி ஊழியர்கள்

அது மட்டுமில்லாமல், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு, வீட்டில் முடங்கிக் கிடைக்கும் பலருக்கும், உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் போல தான் தோன்றுகிறார்கள். அப்படிப்பட்ட ஊழியர்கள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கான உணவை தக்க நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில், கடுமையாக உழைக்கவும் செய்கின்றனர்.

பாராட்டிய ஸ்விகி

அப்படிப்பட்ட உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், உணவை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பது மட்டும் எங்களுடைய வேலை இல்லை என்பதற்கு சான்றாக பேருதவி ஓன்றையும் செய்துள்ளார். பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, தன்னுடைய ஊழியர் ஒருவர் செய்த உதவி ஒன்றை பற்றி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. யார் அந்த ஊழியர், அப்படி என்ன உதவியை அவர் செய்தார் என்பதை பற்றி பார்ப்போம்.

போக்குவரத்து நெரிசல்

மும்பையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மாஜி கர்னல் மாலிக் என்பவருக்கு, கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மகன் உதவியுடன் லீலாவதி மருத்துவமனைக்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்ததால், ஒரு இன்ச் கூட நகர முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.

ஹீரோவான ஸ்விகி ஊழியர்

மாலிக்கின் மகன், அங்கிருந்த இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் சற்று வழி ஏற்படுத்தி தர வேண்டி கெஞ்சியுள்ளார். வழி கிடைத்தால், வேகமாக மருத்துவமனை சென்று, தந்தையை காப்பாற்றி விடலாம் என்பதற்காக அப்படி செய்தார். ஆனால், அங்கிருந்தவர்கள் யாரும் வழி விடவில்லை என தெரிகிறது. அப்போது, அங்கு நின்ற ஸ்விகி டெலிவரி ஊழியரான மிருணாள் கிர்தத் என்பவர், உடனடியாக உதவி செய்ய களத்தில் இறங்கினார்.

வழி பிறந்தது

அங்கிருந்து, கூச்சல் போட்டு, இரு சக்கர வாகன ஓட்டிகளை நகரச் சொல்லி, மாலிக் மற்றும் அவரது மகன், மருத்துவமனைக்கு செல்ல வழி அமைத்துக் கொடுத்தார். அது மட்டுமில்லாமல், மருத்துவமனை வரை வந்து, அங்கிருந்த ஊழியர்களிடம், மாலிக் உடல்நிலை மோசமாகி இருப்பதாக கூறி, உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்.

அவர் ஒரு 'Saviour'

அங்கு பல வாரங்கள் மாலிக்கிற்கு சிகிச்சையளிக்கப்பட் பிறகு, அவரின் உடல்நிலை தற்போது சீராகியுள்ளது. தனது உயிர் காப்பாற்றப்பட்டது பற்றி மனம் திறந்த மாலிக், 'எனக்கு புது வாழ்வு தந்த அந்த இளைஞரை மட்டும் தான் என்னால் நினைக்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரையில், ஸ்விகி அவர்களை அழைப்பது போல, நிஜத்திலும் அவர்கள் ஒரு 'Saviour' தான்.

அவர் மட்டும் இல்லை என்றால், எனது அன்புக்கான குடும்பத்தினரிடம் ஒரு போதும் திரும்ப வந்திருக்க முடியாது. அவருக்கும், அவரைப் போன்ற அனைத்து டெலிவரி ஹீரோக்களுக்கும் எனது நன்றிகள்' என மனம் உருக முன்னாள் ராணுவ வீரர் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swiggy (@swiggyindia)

 

உணவு டெலிவரி செய்வதை விட, எங்களின் கடமை முடிந்து போகாது என்பதை நிஜத்திலும் செய்து கட்டிய டெலிவரி ஊழியர் மிருணாள் கிர்தத்துக்கு, பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

SWIGGY, DELIVERY BOY, HUMANITY, COLONEL, டெலிவரி ஊழியர், ஸ்விகி

மற்ற செய்திகள்