"கொரோனாவை எதிர்கொள்ள ஆமை மாத்திரையா??".. இந்திய விஞ்ஞானியின் பரபரப்பு கண்டுபிடிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளுக்கு பதிலாக ஆமை வடிவிலான மாத்திரையை மும்பையை சேர்ந்த விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.

"கொரோனாவை எதிர்கொள்ள ஆமை மாத்திரையா??".. இந்திய விஞ்ஞானியின் பரபரப்பு கண்டுபிடிப்பு!

SSC அறிவிப்பு: +2 படிச்சிருந்தா போதும் 80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

கொரோனாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆர்என்ஏ தடுப்பூசிகள் பெரும்பாலும் ஊசிகள் மூலம் செலுத்தப்படுகிறது. சிலருக்கு தடுப்பூசி செலுத்த தயங்குவது ஊசிக்கு பயந்துதான். ஆனால்,  எம்ஐடி விஞ்ஞானிகள் இந்த தடுப்பூசிகளை விழுங்குவதன் மூலம் பயன்படுத்த கூடிய ஒரு சிறப்பு வடிவ மாத்திரையை உருவாக்கியுள்ளனர்.

இந்த மாத்திரை முதலில் 2019 ஆம் ஆண்டு இன்சுலின் போன்ற மருந்துகளை வயிற்றின் உட்புறத்தில் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இருப்பினும், 2021 ஆம் ஆண்டில், மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் போன்ற பெரிய மூலக்கூறுகளை திரவ வடிவில் வழங்க அதை சோதிக்க முடிவு செய்தனர். பின்னர் அவர்கள் நியூக்ளிக் அமிலங்களை நிர்வகிக்க முயற்சித்தனர். இவை இரண்டும் தற்போது வெற்றிகரமான முடிவை தந்துள்ளது.

Mumbai scientist invents turtle Shape vaccine Tablet

ஆர்என்ஏ தடுப்பூசிகளின் மூலக் கூறுகள் குறிப்பாக செரிமான மண்டலத்தில் சிதைவடைய கூடியவை எனவே தடுப்பூசி கூறுகள் செரிமான மண்டலத்தில் சிதைவடையாமல் இருப்பதை உறுதி செய்ய சிறுத்தை ஆமை ஓட்டின் வடிவத்தில் மாத்திரையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர். இதுகுறித்து ஆய்வின் முதன்மை ஆசிரியர், டாக்டர் அமேயா கீர்த்தனே கூறுகையில், 'மாத்திரையை உருவாக்கும் துகள்கள் பாலிமர் என அழைக்கப்படும் பாலி (பீட்டா-அமினோ எஸ்டர்கள்) வகையிலிருந்து தயாிரிக்கப்படுகிறது.

எம்ஐடி குழுவின் முந்தைய வேலை, நியூக்ளிக் அமிலங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றை உயிரணுக்களில் செலுத்துவதிலும்  ஒன்றை விட இந்த பாலிமர்களின் கிளை மாறுபாடுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சோதனையின் போது,  ஒவ்வொன்றும் 50 மைக்ரோ கிராம் எம்ஆர்என்ஏ கொண்ட மூன்று மாத்திரைகள் வழங்கப்பட்டது. சோதனையின் நோக்கத்திற்காக ஒரு வகையான புரதத்தை உற்பத்தி செய்ய செல்களைப் பெற வடிவமைக்கப்பட்டது' என்று தெிவித்தார்.

Mumbai scientist invents turtle Shape vaccine Tablet

ஆய்வு ஆசிரியர்  டாக்டர் அலெக்ஸ் ஆப்ராம்சன்

இந்த மாத்திரை வாய்வழி தடுப்பூசியாக வேலை செய்ய போதுமானதாக இருக்கும் மற்றும் இரைப்பைக் குழாயில் பல நோய் எதிர்ப்பு செல்கள் உள்ளன. இரைப்பைக் குழாயின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க அறிய வழியாக செயல்படும். இரைப்பைக் குழாயில் உள்ள பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சாத்தியமான வழியாக இதை நாங்கள் பார்க்கிறோம். இந்த சிகிச்சையானது எதிர்காலத்தில் இரைப்பை குடல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவும் என்று நம்பிக்கை அளித்தார்.

ஒண்ணுமே தெரியலை ஒரே இருட்டா இருக்கு.. தலைகீழாக மாறி போன எக்ஸாம்.. பெற்றோர் செய்த செயல்!

MUMBAI SCIENTIST, INVENT, TURTLE, TURTLE SHAPE VACCINE TABLET, கொரோனா, மாத்திரை, ஆர்என்ஏ தடுப்பூசி

மற்ற செய்திகள்