"நிலாவுல மாட்டிக்கிட்டேன்.. 100க்கு போன் பண்ண முடியல".. நெட்டிசனின் போஸ்ட்.. போலீசின் வேறலெவல் ரிப்ளை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதான் நிலவில் சிக்கிக்கொண்டதாகவும் தன்னால் அவசர அழைப்பு எண்ணிற்கு போன் செய்ய முடியவில்லை எனவும் ட்வீட் செய்திருந்த நபருக்கு காவல்துறை ரிப்ளை செய்திருக்கிறது. இந்த ட்வீட் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகவும் பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
சமூக வலை தளங்களின் வருகை மானுட குல வரலாற்றில் பல முக்கிய விஷயங்களை சாதிக்க காரணமாகவும் அமைந்திருக்கிறது. நொடி நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள நபர்களுடன் நம்மால் உரையாடவும், நம்முடைய திறமைகளை உலகத்தின் முன்பு சமர்ப்பிக்கவும் சமூக வலை தளங்கள் பேருதவியாக இருந்துவருகின்றன. இதன் பயன்பாடு கருதி அரசு துறைகளும் தங்களுக்கென சமூக வலை தல பக்கங்களை துவங்கி தங்களுடைய அறிவிப்புகளை அதில் வெளியிட்டும், மக்களுடைய குறைகளை எளிதில் கண்டறிந்தும் வருகின்றன.
I got stuck here. pic.twitter.com/jCDWkHGHSc
— B.M.S.Khan (@BMSKhan) January 30, 2023
அதன் ஒருபகுதியாக மும்பை காவல்துறை சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தது. அதில் பொதுமக்கள் யாரேனும் ஆபத்தான நிலையில் இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 100க்கு போன் செய்யவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவில் பி.எம்.எஸ். கான் என்பவர் செய்த கமெண்ட் பலரையும் புன்னகைக்க செய்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
அதாவது கான் போலீசின் இந்த பதிவில் தான் நிலவில் சிக்கிக்கொண்டதாகவும் தன்னால் அவசர அழைப்பு எண்ணான 100-க்கு போன் செய்ய முடியவில்லை எனவும் கமெண்ட் செய்திருந்தார். இந்த பதிவு சற்று நேரத்தில் வைரலாகிய நிலையில் மும்பை காவல்துறையும் கானின் கமெண்ட்டிற்கு ரிப்ளை செய்திருக்கிறது. அந்த பதிவில்,"இது உண்மையில் எங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல. ஆனால் சந்திரனில் இருக்கும் நீங்களும் எங்களை நம்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என குறிப்பிட்டு சிரிக்கும் ஸ்மைலியையும் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தியிருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், கான் தன்னுடைய சமீபத்திய பதிவில் தன்னுடைய அந்த பதிவின் நோக்கம் காவல்துறையினரை புண்படுத்துவது அல்ல எனவும் எப்போதும் நமக்காக உழைக்கும் அதிகாரிகளையும் சிரிக்க வைக்க வேண்டும் என கருதியே இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்