'முதலிடத்துக்கு' வந்தது 'மும்பை...' சீனாவுக்கு 'டஃப்' கொடுப்போம்ன்னு... சொன்னது 'எதுலன்னு பாருங்க?...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பாதிப்பில் நோய் தோன்றிய சீனாவின் உகான் நகரை மும்பை முந்தி உள்ளது.

'முதலிடத்துக்கு' வந்தது 'மும்பை...' சீனாவுக்கு 'டஃப்' கொடுப்போம்ன்னு... சொன்னது 'எதுலன்னு பாருங்க?...'

கொரோனாவை உலகிற்கு தந்த சீனாவில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் பாதிப்பு தற்போது 2 லட்சத்து 76 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 7,745 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் அதிக பாதிப்பு நிறைந்த நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.  

கொரோனா வைரஸ் முதல் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுகான் நகரில்அந்நோயால் 50 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், 3 ஆயிரத்து 869 பேர் உயிரிழந்ததாகவும் புள்ளிவிவரங்கள்  தெரிவிக்கின்றன.

தற்போது இந்தியாவின் ஹாட் ஸ்பாட் எனப்படும் மும்பையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 760 ஆக உயர்ந்துள்ளது.

மஹாராஷ்ட்ரா அரசு புள்ளி விபரங்களின்படி மாநிலத்தில் மொத்தம் 90,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இது தேசிய அளவில் பதிவான தொற்றில் 4ல் ஒரு பகுதியாகும். 42,638 பேர் தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

மற்ற செய்திகள்