'மணிக்கணக்கா ஆன்லைனில் சாட்டிங்'... 'கையில் ஒருவித பொடியுடன் வீட்டுக்கு வந்த இளம்பெண்'... வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பகீர் சம்பவத்தை சந்தித்த இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆன்லைனில் பழகிய இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்த இளைஞருக்கு நேர்ந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'மணிக்கணக்கா ஆன்லைனில் சாட்டிங்'... 'கையில் ஒருவித பொடியுடன் வீட்டுக்கு வந்த இளம்பெண்'... வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பகீர் சம்பவத்தை சந்தித்த இளைஞர்!

மகாராஷ்டிரா மாநிலம் புனே ராவட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் சாட் செய்வது வழக்கம். அந்த வகையில் இளம்பெண் ஒருவரோடு அவருக்கு நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாகப் பழகிய நிலையில் நாட்கள் செல்ல செல்ல இருவரும் நெருக்கமானார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு இருவரது நெருக்கமும் அதிகமானது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நாம் இருவரும் தனிமையில் இருக்கலாம், நான் உன்னுடைய வீட்டிற்கு வருகிறேன் என அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த இளைஞரும் அந்த இளம்பெண்ணைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த அந்த இளம்பெண்ணுடன் சில நிமிடம் அந்த இளைஞர் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் தான் கழிவறைக்குச் சென்று விட்டு வருவதாகக் கூறிவிட்டு அந்த இளைஞர் சென்றுள்ளார். அந்த நேரம் தான் அந்த பெண்ணின் சுயரூபம் வெளிப்பட்டது. இருவரும் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பானத்தில் ஒரு குவளையில் தான் கொண்டு வந்த ரசாயன பொடியை அந்த இளம்பெண் கலந்துள்ளார். கழிவறைக்குச் சென்று விட்டு, அந்த பெண்ணோடு தனிமையில் இருக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் வந்த இளைஞர் அந்த குளிர்பானத்தைக் குடித்துள்ளார்.

Mumbai man loses Rs 1.5 lak in romance scam

ஆனால் அந்த குளிர்பானத்தைக் குடித்த சில நிமிடங்களிலேயே அந்த இளைஞர் மயங்கி விழுந்துள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த இளம்பெண், வீட்டிலிருந்த நகைகள், செல்போன், என ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிக் கொண்டு தப்பிச்சென்றார். மயக்கம் தெளிந்த பின்னர் தான், நடந்த சம்பவம் எல்லாம் அவருக்குத் தெரிய வந்தது. சபலத்தால் கஷ்டப்பட்டுச் சேர்த்த அனைத்தையும் இழந்த அந்த இளைஞர், அழுது புலம்பியபடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரசாயன பொடி கலந்த குடிநீரைக் கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணை பிடிக்கத் தனிப்படை ஒன்றையும் போலீசார் அமைத்துள்ளார்கள். ஒரு நிமிட சபலத்திற்கு ஆசைப்பட்டுத் தான் கஷ்டப்பட்டுச் சேர்த்த அனைத்தையும் இழந்து பரிதாபமாக நிற்கிறார் அந்த இளைஞர்.

மற்ற செய்திகள்