'ஏம்பா?.. என்ன தான் தண்ணிப் பஞ்சம் இருந்தாலும்... அதுக்காக 'இப்படி'யா?.. வெளியான சிசிடிவி காட்சிகள்!.. கொந்தளித்த வாடிக்கையாளர்கள்!.. பகீர் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெருவோரக் கடைகளில் உணவு சாப்பிட விரும்புவர்கள் தங்களுடைய உணவு எப்படி செய்யப்படுகிறது எங்கிருந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
மும்பையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு தெருவோர பானிபூரி கடையில், கழிப்பறை நீர் பயன்படுத்தப்பட்ட சம்பவம் அந்தக் கடையின் தினசரி வாடிக்கையாளர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
கோல்ஹாபூரில் ரன்கலா ஏரிக்கு அருகில் இருக்கும் ஒரு பிரபலமான பானிபூரி தள்ளுவண்டி கடை 'மும்பை கி ஸ்பெஷல் பானிபூரி வாலா'. இந்த கடையில் கிடைக்கும் டேஸ்ட்டான உணவுகளை சாப்பிட எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த கடையின் உரிமையாளர், பானிபூரி தண்ணீரில், கழிப்பறை நீரை கலந்தது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது.
அந்த வீடியோ இணையங்களில் வைரலான பிறகு, ஆத்திரமடைந்த கடையின் வாடிக்கையாளர்களே அந்த கடையை அடித்து நொறுக்கி, பொருட்கள் அனைத்தையும் எடுத்து தெருவில் வீசியிருக்கின்றனர்.
பானிபூரி தண்ணீரில் கழிப்பறை நீரை கலந்த இந்த சம்பவம் உணவுப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்