"இதுக்கு மேல தான் இத்தன வருசமா ஹாஸ்பிடல் இருந்துச்சா?".. லீக் ஆன தண்ணி.. என்னடான்னு தோண்டி பாத்தப்போ வெளியே தெரிஞ்ச 132 வருச மர்மம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து தெரிய வந்த விஷயம், பலரையும் தற்போது மிரள வைத்துள்ளது.
மும்பையின் பைக்குல்லா பகுதியில் ஜேஜே மருத்துவமனை அமைந்துள்ளது. அரசு நடத்தி வரும் இந்த மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றதாகும்.
கடந்த 1800 களில் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ஆரம்பத்தில் இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையாக இயங்கி வந்ததாக தகவல் தெரிவிக்கின்றது. இதன் பின்னர் நர்சிங் கல்லூரி அங்கு தொடங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தற்போது ஜே ஜே மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியாகவும் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் இந்த மருத்துவமனையின் கல்லூரி கட்டிடத்தில் நீர் கழிவு புகார் எழுந்ததாக தகவல் தெரிவிக்கின்றது. அப்போது இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நீர் வெளியேறும் பகுதியை ஊழியர்கள் சோதனையிட்டு தோண்டி பார்த்த போது தான் அனைவருக்கும் கடும் வியப்பான விஷயம் ஒன்று தெரிய வந்துள்ளது.
இதற்கு காரணம், அந்த மருத்துவமனைக்கு அடியில் 132 ஆண்டுகளுக்கும் முன்பு இருந்த சுமார் 200 மீட்டர் சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை டீனுக்கும் ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மும்பை கலெக்டர் மற்றும் அப்பகுதி தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் இந்த சுரங்கப்பாதை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4.5 அடி உயரத்தில் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட தூண்களுடன் சுரங்க பாதை அமைந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கும் நிலையில், இதன் நுழைவு பகுதி பெரிய பாறைகள் கொண்டு மூடப்பட்டு இருப்பதாகவும் சுரங்கத்தை ஆய்வு செய்த நபர் தெரிவித்துள்ளார். அதே போல மருத்துவமனை வரைப்படத்தில் கூட இந்த சுரங்கத்தின் விவரங்கள் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது.
ஜே ஜே மருத்துவமனையின் பின் புறத்திலும் அதே வடிவமைப்பில் ஒரு கட்டிடம் உள்ளது என்பதால் இந்த சுரங்கப் பாதையின் இணைப்பாக இருக்கலாம் என்றும் கருதபடுகிறது. 1890 ஆம் ஆண்டு இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளதாக குறிப்புகள் தெரிவிக்கும் நிலையில், இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Also Read | இவ்வளவு டன் தங்கமா?.. திருப்பதி ஏழுமலையானின் மொத்த சொத்து மதிப்பு.. தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கை..!
மற்ற செய்திகள்