ஆர்யன் கானுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமினில் 'புதிய' மாற்றம்...! - மும்பை உயர்நீதிமன்றம் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகனுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமினில் புதிய மாற்றங்களை மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உட்பட சிலர் தேசிய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு (என்சிபி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பல வாரங்கள் போராட்டத்திற்கு பிறகு ஆர்யன்கானுக்கு பல நிபந்தனைகளின் பெயரில் ஜாமீன் வழங்கப்பட்டது.
அதன்படி ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிக்குள் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையை பின்பற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆர்யன்கான் தரப்பு வழக்கறிஞர் என்சிபி-யின் டெல்லி அலுவலகத்தின் சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வருவதால், வெள்ளிக்கிழமை தோறும் மும்பை என்சிபி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்ததில் இந்த மனு குறித்து என்சிபி தரப்பில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும், ஆர்யன் கான் வழக்கறிஞர் ஆர்யன் கான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார்.
இந்நிலையில் மும்பை நீதிமன்றம் 'ஆர்யன் கான் இந்த வழக்கு தொடர்பாக டெல்லிக்கு பயணம் செய்தால் அவர் தனது பயணத் திட்டத்தை மும்பை என்சிபி-யிடம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மும்பைக்கு வெளியே வேறு காரணத்திற்காக பயணம் செய்தால் அவர் தனது பயணத்திட்டத்தை என்சிபி-க்கு தெரியப்படுத்த வேண்டும்' என்றும் நீதிபதி புதிய நிபந்தனை விதித்துள்ளார்.
மற்ற செய்திகள்