'ஏன் பொண்ணுங்க மட்டும் தான் தாலி போடணுமா'?... 'திருமணத்தில் இளைஞர் செய்த அதிரடி சம்பவம்'... நெகிழ்ந்து போன மணப்பெண்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மும்பையில் நடந்துள்ள திருமணம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இருமனங்களை இணைக்கும் திருமணப் பந்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அவ்வாறு நடக்கும் சில திருமணங்களில் சில சம்பவங்கள் பேசு பொருளாக மாறி விடும். அந்த வகையில் மும்பையில் நடந்துள்ள இந்த திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தம்பதிகள் தான் தனுஜா பாட்டீல் மற்றும் ஷார்துல் கதம்.
இவர்கள் தங்கள் திருமணத்தைக் கடந்த ஆண்டே நடந்த திட்டமிட்ட நிலையில் கொரோனா முதல் அலை காரணமாக நடந்த முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது அவர்களது திருமணம் நடந்த நிலையில், ஷார்துலுக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. காலம் காலமாகத் திருமண சடங்குகள் ஆணாதிக்கத்தைக் குறிக்கும் வகையிலே உள்ளது.
அதே ஏன் நான் பின்பற்ற வேண்டும். எனது திருமணத்தில் அப்படி நடக்க வேண்டாம் என அவர் முடிவு செய்தார். அந்த வகையில் திருமணம் நடைபெறும் போது ஒருவருக்கொருவர் கழுத்தில் தாலியைக் கட்டிக்கொள்வார்கள் என்று ஷார்துல் முன்மொழிந்தார். அதாவது நான் தனுஜாவிற்கு தாலி அணிவிப்பதைப் போல அவரும் எனக்குத் தாலி அணிவிப்பார் என ஷார்துல் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட அவரது பெற்றோர் ஆச்சரியப்பட்ட நிலையில், ஷார்துலின் உறவினர்கள் அவரது முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்த ஷார்துல், திருமணத்தில் தனது தனுஜா தங்கத்தால் ஆனால் தாலியை தனக்கு அணிவிக்க அதனை ஷார்துல் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், ''எல்லா சடங்குகளும் எப்போதுமே ஆணுக்கே ஏற்றதாக இருப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ள ஷார்துல், ஒருதலைபட்ச ஒரு சடங்கை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே திருமண நாளன்று மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் தனது கணவர் தாலியுடன் இருக்கப் போவதாகக் கூறியுள்ளது என நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தனுஜா கூறியுள்ளார். தற்போது இந்த தம்பதியரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்