"பை ஃபுல்லா அதுதான்".. கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் கையும் பையுமாக சிக்கிய வெளிநாட்டுப்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் இந்தியாவிற்கு கடத்தப்படுவது போலவே, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி வரும் கும்பலை கையாள கஸ்டம்ஸ் அதிகாரிகள் அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். நவீன ஸ்கேனர்கள், புதிய தொழில்நுட்ப கருவிகள் ஆகியவை மூலமாக இப்படியான திருட்டு சம்பவங்களை தடுக்க சுங்கத் துறை அதிகாரிகள் முயற்சித்தாலும் அவர்களுக்கு டிமிக்கி கொடுக்க முயற்சித்து தொக்காக சிக்கிக்கொள்ளும் நபர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிக்கியிருக்கிறார் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர். அவர் கொண்டு வந்த போதைப் பொருளின் மதிப்பு 60 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"பை ஃபுல்லா அதுதான்".. கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் கையும் பையுமாக சிக்கிய வெளிநாட்டுப்பெண்..!

பையில் இருந்த பொருள்

ஜிம்பாப்வே நாட்டின் ஹராரேயில் இருந்து இந்தியா வந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அவரின் டிராலி பேக் மற்றும் பைல்களில் ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Mumbai airport customs officials arrest Zimbabwean passenger

அந்தப் பெண்ணின் உடமைகளில் இருந்து ஹெராயின் மற்றும் மெதம்பேடமைன் என்னும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்ததாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொத்த போதைப் பொருட்களின் எடை 8.486 கிலோ எனவும் அவற்றின் மதிப்பு 60 கோடி எனவும் அதிகாரிகள் பேசும்போது குறிப்பிட்டனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அந்தப் பெண் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்ததையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.Mumbai airport customs officials arrest Zimbabwean passenger

இது குறித்துப் பேசிய விமான நிலைய சுங்கத்துறை விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரி, “ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து 7,006 கிராம் மஞ்சள் நிறமுள்ள ஹெராயின் மற்றும் 1,480 கிராம் வெள்ளை கிரிஸ்டல் துகள்கள் (மெதம்பேடமைன்) பறிமுதல் செய்யபட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு ரூ.60 கோடி” என்றார்.

கடத்தல், விமானநிலையம், சுங்கத்துறை, SMUGGLING, AIRPORT, CUSTOMS

மற்ற செய்திகள்