நீரில் அடித்து செல்லப்பட்ட 'பெண்'.. நடுவழியில் ஞாபகம் வந்த மகனின் 'முகம்'.. இரவு முழுவதும் நடந்த போராட்டம்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தின் பதாரியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சோனம் டாங்கி. இவர் தனது சகோதரருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பைக் ஒன்றில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
Also Read | பெரும் சோகம்.! பிரபல இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர் & தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்.!
அப்போது, மாலை சுமார் 6 மணியளவில், மேம்பாலம் ஒன்றை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக பைக் சறுக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக, பைக்கில் இருந்த சோனம், ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதனால், அவரது சகோதரர் பதறிப் போன நிலையில், உடனடியாக சகோதரியை காப்பாற்ற ஆற்றில் விழுந்துள்ளார்.
ஆனால், வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக, வெகு தூரத்திற்கு சோனம் அடித்து செல்லப்பட்டதால், அவரது சகோதரரால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆற்றில் விழுந்து சுமார் 5 கி. மீ தூரத்திற்கு சொன்னான் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஆற்றின் நடுவில் இருந்த கட்டுமான பணி நடந்து வரும் பாலத்தின் கீழ், ஒரு இரும்பு கம்பியை பிடித்தபடி நின்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரவு முழுவதும் சோனம் நீரில் போராடிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலையில் மீட்புக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், வலுவான நீரோட்டங்கள் இருந்ததன் காரணமாக, உடனடியாக அவர்களால் சோனமை மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சில வீரர்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு லைஃப் ஜாக்கெட்டை கொடுத்துள்ளனர். தொடர்ந்து, படகு அருகே அவரை இழுக்க முயன்ற போது, மீண்டும் அவரை நீர் இழுத்து சென்றுள்ளது.
இதன்,பின்னர், மீண்டும் பல கி.மீ தூரத்திற்கு இழுத்துக் கொண்டு செல்லப்பட்ட சோனம், மரக்கட்டை ஒன்றில் சிக்கிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு சோனம் குறித்து தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மீட்புக் குழு மற்றும் மக்கள் ஒன்றிணைந்து ஒரு குழாய் உதவியுடன் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசும் சோனம், "பாலம் ஒன்றின் கம்பியை பிடித்துக் கொண்டிருந்த போது, எனது பலம் குறைய ஆரம்பித்தது. இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை வேறு பெய்தது. ஆனால், எனது 8 வயது மகனின் முகத்தை நான் மனதில் நினைத்துக் கொண்டேன். இதனால்,அவனுக்காக நான் வாழ வேண்டும் என எனக்குள் நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்" என சோனம் கூறிஉள்ளார்.
சுமார் 10 மணி நேரத்திற்கு மேல், இரவு முழுவதும் மழை, நீர் என கடுமையான சூழலில், மகனுக்காக வைராக்கியத்துடன் செயல்பட்டு பின்னர் மீட்கப்பட்ட தாயை அனைவரும் வேற லெவலில் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்