"எனக்கு 'ஹெலிகாப்டர்' வேணும்.. வாங்கி குடுங்க..." இந்திய 'ஜனாதிபதி'க்கு கடிதம் எழுதிய 'பெண்'!!.. அவங்க சொன்ன 'காரணம்' கேட்டா 'மனசு' ஒடஞ்சுருவீங்க!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனக்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுக்க வேண்டி, இந்திய ஜனாதிபதிக்கு பெண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள அகர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாசந்தி பாய் லோகர். இவர், தன்னுடைய பண்ணை நிலத்திற்கு செல்ல, ஹெலிகாப்டர் வேண்டும் என்றும், அதனை வாங்க கடன் வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு ஹிந்தியில் கடிதத்தை எழுதியுள்ளார்.
மேலும் அதில், 'எனக்கு சொந்தமாக சிறிது பண்ணை நிலம் இருக்கிறது. அதில் விவசாயம் செய்து தான் நான் பிழைப்பு நடத்தி வருகிறேன். ஆனால், தற்போது அந்த நிலத்திற்கு செல்லும் இரு சாலை வழிகளை பர்மானந்த் பதிதார் என்ற நபரும், அவரது இரண்டு மகன்களும் மறித்து அடாவடி செய்து வருகிறார்கள். இதனால் என்னுடைய நிலத்திற்கு சென்று, என்னால் பிழைப்பு நடத்த முடியவில்லை.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்ததும் பலனில்லை. ஆகவே எனக்கு நீங்கள் உதவுங்கள். சாலை வழியாக செல்ல முடியாததால் ஹெலிகாப்டர் இருந்தால் என் நிலத்திற்கு சென்று வருவேன். அதை வாங்கும் அளவுக்கு பணம் இல்லாததால் அதனை வாங்க கடன் வழங்க உத்தரவிடுங்கள். இதற்கான உரிமம் மற்றும், விவசாயம் மேற்கொள்ள வேண்டி, விவசாயக் கருவிகளையும் எனக்கு கொடுங்கள்' என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிகாப்டருக்கு வேண்டி பெண் ஒருவர் மனு எழுதிய சம்பவம், சற்று வேடிக்கையாக இருந்தாலும் அவருக்கு வேறு வழி தெரியாத விரக்தியில் தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இவரது கடிதம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலான நிலையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர், இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணிற்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்